fbpx
Connect with us

Cinemapettai

ராம்கோபால் வர்மாவின் உலகத்தின் முதல் கொரானா வைரஸ் படம்.. கொரானாவை விட வேகமாக பரவும் டீசர்

Videos | வீடியோக்கள்

ராம்கோபால் வர்மாவின் உலகத்தின் முதல் கொரானா வைரஸ் படம்.. கொரானாவை விட வேகமாக பரவும் டீசர்

இந்திய சினிமாவிலேயே மிகவும் சர்ச்சையை கிளப்பும் இயக்குனர் என்றால் அது ராம்கோபால் வர்மா என்பவர் தான். தமிழில் இவர் சூர்யாவை வைத்து ரத்த சரித்திரம் என்ற படத்தை இயக்கியவர்.

பலகாலமாக இவரின் மீது பெண்களை காட்சிப் பொருளாக பயன்படுத்துகிறார் எனவும், பெண்களின் அங்கங்களை தவறாக பேசுகிறார் என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து இருந்து வருகிறது.

இருந்தாலும் அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து பெண்களைப் பற்றிய கருத்துக்களை அதிரடி கலந்து கூறி வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமீப காலமாக ஆங்கில படங்களையும் இயக்க ஆரம்பித்துள்ளார்.

அமெரிக்காவின் பிரபல ஆபாச பட நடிகை மியா மல்கோவா என்பவரை வைத்து ஏற்கனவே God, Sex and Truth, கிளைமாக்ஸ் என்ற படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ்(coranavirus) பற்றி முதல் முறையாக படம் எடுத்துள்ளார் ராம்கோபால் வர்மா. இந்த படத்தின் டீஸர் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Continue Reading
To Top