Connect with us
Cinemapettai

Cinemapettai

jithan-ramesh-bigg-boss-4

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜித்தன் ரமேசை புலம்ப வைத்த ரம்யா பாண்டியன்.. அடுக்கடுக்கான கேள்விகளால் அலறிய பிக் பாஸ் வீடு!

நாளுக்கு நாள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் மீது ரசிகர்களுக்கு அதிக அளவு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் கடந்த 3 சீசன்களும் காதலால் ஃபேமஸ் ஆனாலும், இந்த சீசன்  மட்டும் சற்று வினோதமாக மோதலுக்கு ஃபேமஸ் ஆகிவிட்டது.

ஏனென்றால் வந்த முதல் நாளிலிருந்து நேற்றுவரை கன்டஸ்டன்ட்களுக்கிடையே தினசரி குறைந்தபட்சம் ஒரு சண்டை யாவது நடந்துவிடுகிறது.

அந்த வகையில் இதுவரை சண்டையே போடாத ஜித்தன் ரமேசை, ரம்யா பாண்டியனுடன் கோர்த்து விட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார் பிக் பாஸ்.

மேலும் கொடுக்கப்பட்ட டாஸ்க்கை வச்சுதான் ரமேஷ் வாய தொறக்க வைக்கமுடியும் என்று முடிவெடுத்த ரம்யா, ஜித்தன் குரூப்பில் உள்ளவர்களைப் பற்றி வித விதமான கேள்விகளை அடுக்கடுக்காக அடுக்கினார்.

அதற்கு பதில் சொல்ல முடியாமல் ரமேஷ் திணறி போனது  ரம்யாவின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அதுமட்டுமில்லாமல், அகம் டிவி வழியே பார்த்துக் கொண்டிருந்த அர்ச்சனா அண்ட் கோ ‘சொதப்பிராதிங்க அண்ணா’ என்று பிக்பாஸ் வீட்டையே அலற வைத்தனர்.

Ramesh

Ramesh

எனவே, ஜித்தன் ரமேசை கேள்விகளால் திணறடித்து ஹோல் குரூப்பையும் அலறவிட்ட ரம்யாவுக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால் ஜித்தன் ரமேஷ் தான் வெற்றி பெற்றதாக தெறிகிறது. ஜித்தன் எப்பவுமே ராஜா வீட்டு கண்ணுக்குட்டி தான்!

Continue Reading
To Top