நடிகை ரம்பா கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் இந்திரன் பத்மநாதனிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளாராம். கோலிவுட், மல்லுவுட்டில் நடிகர், நடிகைகள் விவாகரத்து செய்து வருவது அதிகரித்துள்ளது. நடிகை அமலா பால் தான் காதலித்து மணந்த கணவர் ஏ.எல். விஜய்யிடம் இருந்து பிரிந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் நடிகை ரம்பாவும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தொடையழகி என்று அழைக்கப்பட்ட ரம்பா ரஜினிகாந்த், கமல் ஹாஸன், விஜய், அஜீத் உள்ளிட்ட கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட் பக்கம் சென்ற ரம்பா சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்தார். பார்க்க பாலிவுட் நடிகை திவ்ய பாரதி போன்றே இருப்பதால் ரம்பாவை இந்தி ரசிகர்கள் உடனே ஏற்றுக் கொண்டனர்.

திரையுலகிற்கு வந்து 17 ஆண்டுகள் கழித்து ரம்பா கனடாவை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரன் பத்மநாதனை கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு கனடாவில் செட்டிலான ரம்பா படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். ரம்பாவுக்கு லான்யா, சாஷா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் அவருக்கும், கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.

அமலா பால் விவாகரத்து கோரினார், அதன் பிறகு நடிகை திவ்யா உன்னி கணவரை பிரிந்தார், நடிகை லிசிக்கு விவாகரத்து கிடைத்தது, சூப்பர் ஸ்டாரின் இளைய மகள் சவுந்தர்யா கணவரை பிரிந்து வாழ்கிறார், தற்போது ரம்பா விவாகரத்து கோரியுள்ளார்.