ராமராஜன் ரீ என்ட்ரி படத்திற்கு வந்த ஆபத்து.. சாமானியன் என்ற டைட்டிலில் நடந்த துரோகம்!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தவர் நடிகர் ராமராஜன். கிராமத்து படங்கள் என்றாலே அதில் ராமராஜன் தான் நடிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்பும் வகையில் கிராமத்து நாயகனாக வலம் வந்தார். ஆனால் சில காலங்களுக்கு பிறகு ராமராஜன் கிராமத்து கதையில் நடித்து போரடித்து விட்டதால் கொஞ்சம் மாடர்னாக நடிக்க விரும்பினார்.

அது அவருக்கு செட் ஆகாததால் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்காமல் ஓரம் கட்டப்பட்டார். அதன்பிறகு தற்போது சினிமாவிற்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் ராமராஜன், இயக்குனர் ராகேஷ் இயக்கும் சாமானியன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

Also Read: மகளுடன் ராமராஜன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்.. நளினிக்கு ட்வின்ஸ்ஷா.!

இந்த படமும் தற்போது பெரும் சிக்கலில் மாட்டி இருக்கிறது. ஏனென்றால் ஏற்கனவே சாமானியன் என்ற ஒரு டைட்டிலை பதிவு செய்து அதற்கான கதையையும் தயார் செய்து வைத்திருக்கிறார் டான்ஸ் கோரியோகிராபர் பாபி ஆன்டனி. அதை தயாரிப்பாளர் மதியழகன் இடம் சொல்ல சூப்பரா இருக்குது.

நாம் இதை பண்ணலாம் என்று டைட்டிலையும் கதையையும் வாங்கி, அவர் கம்பெனி பெயரில் ரிஜிஸ்டர் செய்துவிட்டார். இப்போது மதியழகன் ராமராஜனை வைத்து எடுக்கும் படத்திற்கும் சாமானியன் என்று பாபி ஆன்டனி டைட்டிலை வைத்துவிட்டாராம்.

Also Read: விபரித ஆசையால் வாழ்க்கையை இழந்த ராமராஜன்.. விஷயம் தெரிந்து விவாகரத்தான சம்பவம்!

இந்த டைட்டிலை பாபி ஆண்டனி விஷால் கேட்டும் கொடுக்கவில்லையாம். இன்னிலையில் மதியழகன் தன்னைக் கேட்காமல் இப்படி செய்து விட்டாரே என்று இப்போது எதுவும் செய்ய முடியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார் பாபி ஆன்டனி. இதற்கிடையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்ட்ரி கொடுத்திருக்கும் ராமராஜனின் படத்திற்கு டைட்டிலால் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

மேலும் இந்தக் கதை மிகவும் பிடித்து போனதால் தான் இவ்வளவு நாள் அப்பா, வில்லன் போன்ற நிறைய கதாபாத்திரங்கள் ராமராஜன் அவர்களைத் தேடி வந்தாலும் அவர் நடிக்க விரும்பவில்லை. சாமானியன் படத்தில் நகரத்திற்கு வரும் கிராமத்து வாசி செய்யும் செயல்கள்தான் படத்தின் கரு.

Also Read: ராமராஜனை காப்பியடிக்கும் விஜய்சேதுபதி.. கோடியில் புரளுவதற்கு இதுதான் காரணமா.!

ஆகையால் பலரும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படத்திற்கு சாமானியன் என்ற டைட்டிலின் மூலம் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைக்கு சுமுகமாக தீர்வு கிடைக்கும் என நம்புகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்