Tamil Cinema News | சினிமா செய்திகள்
கரகாட்டக்காரன் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் இவர் தானாம்.. அவரை எல்லாம் நினைச்சு கூட பார்க்க முடியலையே!
1989 ஆம் ஆண்டு ராமராஜன், கனகா நடிப்பில் கங்கை அமரன் இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கரகாட்டகாரன். சமீபத்தில்தான் 31 ஆண்டுகளை நிறைவு செய்தது இந்த படம்.
வெங்கட் பிரபுவின் தந்தையான கங்கை அமரன் இந்த படத்தை இயக்கியிருந்தார். இளையராஜாவின் இசை இந்த படத்திற்கு பெரிய தூணாக அமைந்தது. அதேபோல் கவுண்டமணி செந்தில் கூட்டணியில் உருவான வாழைப்பழ காமெடியை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா.
மக்கள் நாயகன் ராமராஜன் இந்த படத்தின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகராக வலம்வந்தார். முதன்முதலில் இந்த படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் கரகாட்டக்காரன் படம் ஓடாது என கூறினார்களாம்.
ஆனால் இந்த படம் ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக ஓடி வசூலை வாரி குவித்தது. இன்று 100 கோடி, 200 கோடி என்று சொல்லும் அளவுக்கு அப்போதே வசூலில் பட்டையை கிளப்பியது.
கரகாட்டக்காரன் படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது நடிகர் மைக் மோகன் தானாம். அப்போது அவர்தான் பிரபலமான நாயகனாக வலம் வந்து கொண்டிருந்தார். வார வாரம் அவரது படங்கள் வெளியாகிக் கொண்டிருந்த காலகட்டம் அது.
முதலில் மைக் மோகன் தான் கரகாட்டக்காரன் படத்தில் கதைக்கு சரியாக இருப்பார் என்று தோன்றியதாகவும், ஆனால் கிராமத்து கதாபாத்திரம் என்றால் ராமராஜன் தான் சரி என தேர்வு செய்து விட்டார்களாம்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
