இவ்வளவு நாள் அமைதிகாத்து வந்தார், மக்கள் நாயகன் ராமராஜன். முன்னாள் முதல்வர் ஜெ. மீது அளவற்ற பாசம் வைத்தவர் ராமராஜன்.

விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியபோது ஜெ., தான் உயரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து உயிரைக் காப்பற்றினார்.

ஜெ., உடல் பாதிக்கப்பட்டு ,மருத்துவமனையில் இருந்த போது மிகுந்த மனக் கவலையில் இருந்த ராமராஜனுக்கு நெஞ்சு வலி உண்டானது.

அவரின் மனைவி நளினிதான் அருகே இருந்து ராமராஜனை காப்பாற்றினார் என்று செய்திகள் வந்தது. சசிகலா க்ரூப்புடன் சேராமல் வீட்டில் முடங்கி கிடந்தார்.

முதல்வர் பன்னீர் ஜெ., சமாதியில் தியானப்புரட்சி செய்து சசிகலாவுக்கு சவாலாக இருந்து வருகிறார்.

கட்சியின் பெருந்தலைகள் எல்லாம் பன்னீர் பக்கம் சேர்ந்து வருகின்றனர். இந்த நேரத்தில் மக்கள் நாயகன் ராமராஜன் சமூகவளைத்தளங்களில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒரு வார இதழிலும் தனது கருத்தை நச்சென்று பதிவிட்டுள்ளார். அதாவது நாட்டை சசி எனும் புற்று நோய் தாக்கியுள்ளது.

அதை ஆரம்பத்திலேயே ஆபரேஷன் செய்து  வெட்டி எறிய வேண்டும். இல்லையேல் தமிழகம் உயிர் பிழைப்பது கஷ்டம்.

முதல்வர் பன்னீர் தான் இப்போதைய புரட்சித்தலைவர். விரைவில் முதல்வரை சந்தித்து அவருடன் இணைவேன் என்று கூறியுள்ளார் ராமராஜன்.

அடுத்து விந்தியாவும் பன்னீர் பக்கம் வருவார் என்று கூறுகிறார்கள்.

மாற்றம் ஒன்றே மாறாத தத்துவம்.