Cook with comali: குக் வித் கோமாளி நிகழ்ச்சி தமிழக மக்கள் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களாலும் அதிக அளவில் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சி. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு 45 நிமிடம் எந்த கவலையும் இல்லாமல் மக்கள் வயிறு குலுங்க சிரித்த இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த நிகழ்ச்சியின் முதலாவது சீசன் மற்றும் இரண்டாவது சீசன் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதற்கு மொத்த காரணமும் அந்த சிரிப்பலை தான். ஆனால் தற்போது இந்த நிகழ்ச்சி மொத்தமாக தன் சுயத்தை இழந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
கடந்த வாரம் சனிக்கிழமை மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகி விட்டேன் என வீடியோ போட்டது. அதன் பின்னர் நடந்த சம்பவம் எல்லாமே நமக்குத் தெரியும். மணிமேகலை விலகிய பிறகு இந்த வார நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் இருந்தது.
மொத்தமா வன்மைத்தை கக்கும் பிரியங்காவின் விழுதுகள்
ஆனால் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோ பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு அமைந்துவிட்டது. இந்த ப்ரோமோவில் ராமர் மற்றும் புகழ் இருவரும் இணைந்து மணிமேகலையை கலாய்த்து இருக்கிறார்கள்.
புகழ் தொகுப்பாளர் போலவும், ராமர் குக்கு போலவும் நின்று கொண்டிருக்கிறார்கள். அப்போது புகழ் இந்த வாரம் நாங்கள் இரண்டு குக்குகளை எடுத்து இருக்கிறோம் என்று சொல்கிறார். அதற்கு ராமர் எடுத்திருக்கிறோம் என்று சொன்னால் நிகழ்ச்சியை விட்டு தூக்கி விட்டோம் என்று அர்த்தம் வரும். செலக்ட் பண்ணி இருக்கிறோம் என்று சொல்லு அப்படின்னு சொல்கிறார்.
அதற்குப் புகழ் நான் என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியும் ,நீங்க ஒரு தொகுப்பாளருக்கு மரியாதை கொடுங்க ,இல்லன்னா நிகழ்ச்சியை விட்டு வெளியே போங்க என்று பேசுகிறார். இதற்கு சுற்றி இருக்கும் அத்தனை பேரும் சிரிக்கிறார்கள்.
மணிமேகலை மற்றும் பிரியங்காவின் பிரச்சனை என்பது அவரவர் தனிப்பட்ட கருத்து. இதை குக் வித் கோமாளி போன்ற ஒரு நிகழ்ச்சியில் பகடி செய்வது என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என பலரும் விமர்சனம் சொல்லி வருகிறார்கள்.
இந்தப் பிரச்சினையில் கருத்து சொல்லாமல் இருப்பதே நல்லது என்பது தான் எல்லோருடைய எதிர்பார்ப்பு. அதை மீறி புகழ் மற்றும் ராமர் இப்படி செய்திருப்பது சமூக வலைத்தளத்தில் பெரிய எதிர்ப்பை சந்தித்திருக்கிறது .
- வன்மம் , ஆதிக்கம் பத்தி நீங்க பேசலாமா மணி, CWC-ல இவ்ளோ நாள் செஞ்சதெல்லாம் மறந்து போச்சா?.
- மணிமேகலைக்கு பயம், விஜய் டிவி தான் அவளை வெளிய போக சொன்னது
- பிரியங்காவா, மணிமேகலையா