தனது சீடர்கள் 400 பேருக்கு ஆண்மை நீக்கம், இரண்டு சிஷ்யை மீது பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களில் சிக்கி இருந்த குர்மீத் ராம் ரஹீம் சிங் என்ற சாமியாருக்கு இன்று மதியம் மூன்று மணியளவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

1948ம் ஆண்டு மஸ்தானா பலோசிஸ்தானி என்பவரால் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. மஸ்தானா இறந்த பிறகு 1990ம் ஆண்டு இந்த அமைப்பின் தலைவரானார் குர்மீத் ராம் ரஹீம் சிங்.

gurmeet ram rahimஇந்த அமைப்புக்கு இன்று உலகெங்கும் 46 ஆசிரமங்கள் உள்ளன. மரம் நடுதல், ரத்த தானம், சுகாதார சூழல், ஆதரவற்றோருக்கு உதவி, பூர்வ இனக் குடியினருக்கும் திருநங்கைகளுக்கும் ஆதரவு போன்ற சேவைகளை செய்து வந்துள்ளது இவ்வமைப்பு.

ராம் ரஹீம் பற்றிய சில தகவல்கள்:

2014ம் ஹரியானா தேர்தலின்போது பாரதிய ஜனதாவை ஆதரித்தார். அதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியை ஆதரித்து வந்தார்.

குர்மீத் ராமின் பல சமூகப் பணிகள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இவர் ஒரு கட்டத்தில் தன்னையே மனித ரூபத்தில் வந்த கடவுளாகச் சித்தரித்துக் கொண்டார்.

மெஸஞ்சர் ஆஃப் காட்’ என்ற தலைப்பில் 5 திரைப்படங்களை எடுத்து அதிரவைத்தார்.

யானையையே தூக்கி அடிப்பது போன்ற காட்சிகளை வைத்து அதிர்ச்சியூட்டினார்.

சிறந்த நடிகர், தலைசிறந்த பன்முகக் கலைஞர் ஆகிய விருதுகளை மகாராஷ்டிர அரசு வழங்கியது.

குரு கோவிந்த் சிங் போல உடை அணிந்து விளம்பரத்தில் தோன்றியதால் சீக்கியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

2002ம் ஆண்டு குர்மித் ராம் தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் வாஜ்பாய்க்கு கடிதம் எழுதியிருந்தார்.

சிபிஐ நடத்திய விசாரணையில் 2 பெண் சீடர்களுக்கு குர்மித் ராம் பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலமானது.

இந்நிலையில் ஹரியானா பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம், சாமியார் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என தீர்ப்பு வெளியானது. இதனை தொடர்ந்து பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பயங்கர கலவரம் மூண்டுள்ளது.

சுமார் 33 நபர்கள் இதுவரை இறந்துள்ளனர், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மும்பை, டெல்லி போன்ற நகரங்களிலும் கலவரம் மூல வாய்ப்புள்ளதால் வட இந்திய பெருநகரங்கள் எங்கும் காவல் குவிக்கப்பட்டுள்ளது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: என்னைக்குதான் நம்ம மக்களுக்கு இந்த சாமியார் மோகம் போகுமோ?