Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினிக்கு ஒன்று – அஜித்திற்கு இரண்டு. பேட்ட, விஸ்வாசம் FDFSவில் மரண + கொல மாஸ் உறுதி என்பதை அறிவித்த பிரபல திரையரங்கம்.
பேட்ட vs விஸ்வாசம்
பொங்கல் என்ற போட்டி சில நாட்களாகவே ஆரம்பித்து விட்டது. கார்த்திக் சுப்புராஜ் பழைய நக்கல், ஸ்டைல் உள்ள ரஜினியை மீண்டும் உயிர்ப்பித்துளார். இயக்குனர் சிவாவோ விவசாயி, குடும்ப செண்டிமெண்ட், கிராமத்து குசும்புடன் அஜித்தை இயக்கியுள்ளார். இரண்டு ஹீரோக்குமே படத்தில் டூயல் கெட் அப் தான்.

petta-viswasam
இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும் போட்டி எனவும் எதிரி எனவும் நினைக்காதவர்கள் என்பதும் நாம் அறிந்த விஷயமே. அதுவே இந்த இருவர் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. தமிழகத்தில் நிறைய தியேட்டர்கள் இருப்பதால் இரண்டு படங்களுக்குமே நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்நிலையில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ராம் முத்துராம் சினிமாஸ் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். வரும் 10 ஆம் தேதி பேட்ட மற்றும் விஸ்வாசம் இரண்டு படங்களையும் இவர்கள் திரையிடுகின்றனர்.

ram muthuram cinemas
ஒன்ஸ் மோர் கலாச்சாரம்
முன்னணி ஹீரோக்களின் ரசிகர்கள் ஷோ போடும் பொழுது, ஒபெநிங் சாங் அல்லது ஆடியோவில் சூப்பர் ஹிட் அடித்த பாடல் அல்லது சண்டைக்காட்சிகள் அசத்தலாக இருந்தால் ரசிகர்கள் ஒன்ஸ் மோர் கேட்பதும், அதனை மீண்டும் ஆபரேட்டர் போடுவது வழக்கமான ஒன்று தான்.
Superstar's #Petta #MaranaMass will be screened twice only for the FDFS @ 5AM !!
Thala Ajith's #Viswasam #AdchuThooku & #VettiKattu will be screened twice only for the FDFS @ 4AM !!
Petta single song due to the movie duration !#PettaInRamCinemas #ViswasamInRamCinemas pic.twitter.com/k2SM58lRCX— Ram Muthuram Cinemas (@RamCinemas) January 5, 2019
அந்தவகையில் பேட்ட படத்தில் மரணமாஸ் பாடலும் விஸ்வாசம் படத்தில் அடிச்சுதூக்கு, வேட்டிக்கட்டு பாடல் மீண்டும் பிலே செய்வோம் என்று ஸ்டேட்டஸ் தட்டியுள்ளனர். பேட்ட படத்தின் ஓடும் நேரம் காரணமாக தான் ஒரு பாடல் மட்டும் என்ற தகவலையும் சொல்லியுள்ளனர்.
சினிமாபேட்டை ரெக்வஸ்ட்
தில்லு முள்ளு ரஜினியை நினைவுபடுத்தும் “உல்லல்லா” பாடலையும் ப்ளீஸ் போடுங்க ஆபரேட்டர்.
