Connect with us
boomerang-movie

இந்திய பிரதமரையே சாடிய ராம் கோபால் வர்மா – பரபரப்பு சம்பவம்

ram-gopal-varma-

News | செய்திகள்

இந்திய பிரதமரையே சாடிய ராம் கோபால் வர்மா – பரபரப்பு சம்பவம்

ram-gopal-varma-ரங்கீலா, ரத்த சரித்திரம் உட்பட பல படங்களை இயக்கியவர் ராம்கோபால் வர்மா. தெலுங்கு மற்றும் இந்திப் படவுலகின் முன்னனி இயக்குநர். தன் படங்களைத் தாண்டி இவரை ஹாட் டாபிக்காக வைத்திருப்பது இவரது பேட்டிகளும் ட்வீட்டுகளும் தான்.

தற்போது இவர் வசைபாடியுள்ளது  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தான்.

‘ஸ்வச் பாரத்’ என்ற தூய்மை இந்தியா திட்டத்தின் அனிமேஷன் விளம்பரம் சமீபத்தில் வெளியானது. இந்த விளம்பரத்தைப் பார்த்த ராம்கோபால் வர்மா, “இந்த விளம்பரம் எனது ‘ஆக்’ திரைப்படத்தைவிட படுமோசமாக உள்ளது. இதுபோன்ற விளம்பரங்களால் இந்தியா தூய்மையற்றுத்தான் போகும் என்று யாராவது மோடியிடம் கூறுங்கள்” என்று டிவிட்டி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

இதுபோல் டிவிட்டுவது அவருக்கொன்றும் புதியதில்லை என்றாலும் நேரடியாக பிரதமர் மோடியைக் குறைசொல்லியிருப்பது பெரும் பிரச்சனைக்குள்ளாகியுள்ளது. பலரும் டிவிட்டரில் அவரை சாடி வருகின்றனர்.

ராம்கோபால் வர்மா மட்டும் தமிழகத்தில் இருந்திருந்தால் ‘தேசிய ஒருமைப்பாட்டைக் கெடுக்கிறார்’ என்று பல வருடம் முன்பே கைதாகியிருப்பார். வாங்க ஜி தமிழ்நாட்டப் பத்தி ஏதாவது ட்வீட் பண்ணுங்கஜி!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top