பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா, அவ்வப்போது ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை டுவிட்டரில் தெரிவித்து அவருடைய ரசிகர்களிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொள்வது வழக்கமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான சுதீப் நடித்த ‘முடிஞ்சா இவனைப்பிடி’ படத்தை பாராட்டிய ராம்கோபால் வர்மா, ரஜினியை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்துள்ளார்.

ராம்கோபால் வர்மா தனது டுவிட்டரில், ‘முடிஞ்சா என்னை பிடி’ படத்தில் சூப்பராக நடித்துள்ள நீங்கள் ஒருநாள் ‘ரோபோ’ போல ஒரு படத்தில் நடித்துவிடுவீர்கள். ஆனால் ரஜினியால் ‘நான் ஈ’ போன்ற ஒரு படத்தில் நடிக்க முடியாது’ என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சுதீப் கூறியபோது, தாங்கள் என்னுடைய படத்தை பாராட்டியதற்கு நன்றி. ஆனால் அதே நேரத்தில் ரஜினியுடன் என்னை ஒப்பிட வேண்டாம். அந்த அளவுக்கு எனக்கு தகுதியில்லை’ என்று கூறியுள்ளார்.