தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களை கொண்டாடுவதற்காகவே தமிழ்நாட்டில் சில திரையரங்குகள் உள்ளன. அந்த வகையில் சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
ஆனால் வெளி மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராம் முத்துராம் சினிமாஸ் திரையரங்கம் தனி கவனம் பெறுகிறது. மேலும் பல நடிகர்களுக்கும் ராம் சினிமாஸ் தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்க பிடிக்கும்.
அந்த வகையில் திருநெல்வேலியில் மற்ற நடிகர்களின் படங்களை விட தளபதி விஜய்யின் படங்கள் எதிர்பார்த்ததைவிட அளவுக்கு அதிகமாக வசூல் செய்யும். மற்ற மாவட்டங்களில் தோல்வியடையும் படங்கள் கூட ராம் சினிமாஸ் நிறுவனத்திற்கு நல்ல லாபம் பெற்று கொடுக்கும்.
அந்த அளவுக்கு சமூக வலைதளங்களிலும் நேரடி விளம்பரங்களிலும் தொடர்ந்து கவனமாகவும் சிறப்பாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ராம் சினிமாஸ் நிறுவனத்திற்கு நல்ல லாபம் ஈட்டி கொடுத்ததாக தெரிவித்தனர்.
அதனை கிண்டல் செய்யும் விதமாக மற்ற நடிகரின் ரசிகர் ஒருவர், கேலி பண்ணியுள்ளார். மேலும் படம் தோல்வி அடைந்ததை எப்படியெல்லாம் மறைக்க போராடுகிறார்கள் என்று கிண்டலடித்துள்ளார். ஆனால் ராம் சினிமாஸ் நிறுவனம் இப்படி ஒரு பதிலடி கொடுக்கும் என அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

நீங்க பிளாப் என்று கத்துற சுறா படமே எங்களுக்கு நல்ல லாபம் கொடுத்த படம் தான் என செம பதிலடி கொடுத்துள்ளனர். இது விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தொடர்ந்து விஜய் படங்களை பார்க்க வரும் ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.