மொத்த சினிமா உலகையும் மிரட்டிவிட்ட ராஜமவுலியின் RRR.. மிரள வைக்கும் ராம்சரணின் கேரக்டர் வீடியோ

இந்திய சினிமா உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு உச்சத்தில் உள்ள இயக்குனர் என்றால் அது ராஜமௌலி தான். பாகுபலி பாகுபலி 2 ஆகிய படங்களின் மூலம் உலகப் புகழ்பெற்றவர்.

பாகுபலி படங்களுக்கு பிறகு தற்போது தனது அடுத்த படத்தின் அறிவிப்பை ராஜமௌலி சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார். அதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகிய இருவரும் இணைந்து RRR என்ற படத்தில் நடித்திருந்தனர்.

டைட்டில் மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தெலுங்கு வருடப்பிறப்பு தினமான இன்று RRR படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ராம்சரன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் ஒரே படத்தில் இணைவதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளன. வித்யாசமாக வெளிவந்துள்ள RRR படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

அதனைத் தொடர்ந்து ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு RRR படத்தில் ராம்சரணின் கேரக்டர் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. மேலும் முதன்முறையாக ஜூனியர் என்டிஆர் தமிழில் டப் செய்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment