Connect with us
Cinemapettai

Cinemapettai

ram-charan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ராம்சரண் வெளியிட்ட அறிக்கையால் அதிர்ந்து போன திரையுலகம்.. இவருக்கே இந்த நிலைமையா?

சிரஞ்சீவி மகனுமான தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகருமான ராம்சரண் தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் வசூலை வாரி குவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான மகதீரா எனும் தெலுங்கு திரைப்படம் தெலுங்கு தேசத்தில் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அந்த படம் தமிழில் டப் செய்து வெளியானது.

தமிழில் டப் செய்து வெளியான இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் தமிழ் ரசிகர்களுக்கு தெரியக்கூடிய ஒரு கதாநாயகனாக ராம்சரண் தமிழ் சினிமாவிற்கு வலம் வந்தார்.

இதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் தமிழை விட தெலுங்கு சினிமாவில் கவனத்தை செலுத்தி அங்கு தனது வெற்றிகளை குவித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் ராஜமவுலி இயக்கி வரும் ஆர் ஆர் ஆர் படத்தில்  என்டிஆர் மற்றும் ராம்சரண் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இருவரும் நடித்துள்ளதால் இப்படத்தினை தெலுங்கு ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தற்போது இவர் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் தனது கொரானா தொற்று ஏற்பட்டுள்ளதாக மேலும் தனிமையில் இருப்பதாகவும் விரைவில் குணமடைந்து மீண்டும் வருவேன் என்றும் இரண்டு நாட்கள் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் சீக்கிரம் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ram charan

ram charan

இதனால் ராம்சரண் ரசிகர்கள் தற்போது சோகத்தில் உள்ளனர். மேலும் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் தங்களது பாசத்தினை தெரிவித்து வருகின்றனர். இதுவரை இவர் தமிழ் மொழியில் எந்த ஒரு படமும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top