நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தேசிய விருது பெற்ற இயக்குனர் ராமின் அடுத்த படைப்பான தரமணி திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தில் அறிமுக நடிகர் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி, அழகம் பெருமாள் ஆகியோர் நடித்திருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் பணியாற்றியிருக்கின்றனர்.

அண்மையில் தரமணி படத்தின் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளிடப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரைக்குவர இருக்கிறது தரமணி படம். படத்தைப் பற்றி நடிகை அஞ்சலி கூறுகையில், இயக்குனர் ராமின் வேண்டுகோளுக்கிணங்க இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன். இதற்கு முன் நான் நடித்த படங்களில் இருந்து மிகவும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன்.

தரமணி படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழ் அளித்துள்ளது. இது பற்றி இயக்குனர் ராம் கூறுகையில், தணிக்கை குழுவின் கூற்றுப்படி ஆண் ‘ரா’வாக மது அருந்தினால் UA; பெண் ‘ரா’வாக மது அருந்தினால் A- ஆக தரமணி A என்று குறிப்பிடிருந்தார். அதுவே படத்தின் போஸ்டரிலும் இடம் பெற்றிருந்தது.

மேலும் ஆண் பிடித்தாலும் சரி, பெண் பிடித்தாலும் சரி புகையால் வருவது புற்றுநோயே. மேலும், ரொம்ப பேசாத, இப்பல்லாம் பேசுனாலே குண்டாஸ்ல கைது பண்றாங்க, பாத்துக்கோ.. என்று அரசியல் மற்றும் சமூகரீதியான கருத்துக்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்ட போஸ்டர்களில் இடம்பெற்றிருந்தன.