fbpx
Connect with us

Cinemapettai

வெறும் 20 நிமிடம் நடிக்க கோடி கணக்கில் சம்பளம் வாங்கிய ராகுல் பரீத் சிங்.! எந்த படத்தில் தெரியுமா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெறும் 20 நிமிடம் நடிக்க கோடி கணக்கில் சம்பளம் வாங்கிய ராகுல் பரீத் சிங்.! எந்த படத்தில் தெரியுமா

கார்த்திக் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராகுல் பிரீத் சிங் நடித்து இருப்பார், இந்த படத்தின் மூலம்தான் தமிழில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் rakul preet singh.

இவர் சினிமா உலகில் தெலுங்கில் வெளியான கில்லி படத்தின் மூலம் அறிமுகமானார் ஆனால் தற்போது தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார், தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு பிறகு இவரின் மவுஸ் அதிகரித்துவிட்டது தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி வருகிறார்.

மேலும் தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகர் என்டிஆரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகை ராகுல் பிரித் சிங் நடிக்க இருக்கிறார், தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா இந்த படத்தில் என் டி ஆரின் கதாபாத்திரத்திலும், ஹிந்தி நடிகை வித்யா பாலன் என்டிஆரின் மனைவியாக நடிக்க இருக்கிறார்,மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கதாபாத்திரம் இந்த படத்தில் வருவதால் அந்த கதாபாத்திரத்திற்கு தான் நடிகை ராகுல் பிரீத் சிங் கமிட்டாகியுள்ளார்.

மேலும் ஸ்ரீதேவியின் கதாபாத்திரம் 20 நிமிடம் மட்டுமே, இந்த 20 நிமிடத்திற்காக  தான் rakul preet singh சம்பளமாக ஒரு கோடி ரூபாய் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top