Entertainment | பொழுதுபோக்கு
ரகுல் ப்ரீத் ஜிம் ஒர்கவுட் வீடியோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் முதல் முதலில் கன்னட படத்தில் தான் சினிமாவில் அறிமுகமானார், அதன் பின்பு தமிழில் தடையற தாக்க என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இவரின் கேட்ட நேரம் தமிழில் நடித்த படங்கள் இவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுக்க வில்லை அதனால் தெலுங்கு பக்கம் வண்டியை திருப்பினார் தெலுங்கு சினிமாவோ இவரை வரவேற்த்தது தெலுங்கில் பல படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார், அதன் பின்பு சில வருடம் கழித்து தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி ஆனார் ஆம் கார்த்திக் நடித்த தீரன் அதிகாரம் ஓன்று படத்தில் ஜோடியாக நடித்தார் படமும் தாறுமாறாக ஹிட் அடித்தது.
இதற்க்கு முன் தமிழ் சினிமாவில் ராசியில்லா நடிகை என பெயர் எடுத்திருந்தார் அந்த பெயர் தீரன் அதிகாரம் படத்தின் மூலம் காணாமல் போனது, தற்பொழுது இவருக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கின மேலும் இவர் சூர்யாவின் NGK படத்திலும் , கார்த்திக் படத்திலும் சிவகார்த்திகேயன் படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்த நிலையில் இவரின் வீடியோ ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது, வீடியோவில் ராகுல்ப்ரீத் அதிக எடை போட்டு ஜிம்மில் வொர்க்கவுட் செய்து வருகிறார், இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு வைட்டா போடுவிங்க என வியப்பில் இருக்கிறார்கள்.
