Tamil Cinema News | சினிமா செய்திகள்
இளம் நடிகர் தற்கொலையில் கையும் களவுமாக மாட்டிய ரகுல் ப்ரீத் சிங்? எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு!
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் பிரீத் சிங். இவர் இந்தியில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.
மேலும் இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ள ரகுல் பிரீத் சிங் தற்போது கைவசம் ஒரு சில படங்கள் மட்டுமே வைத்துள்ளார்.
இந்நிலையில் அடுத்ததாக வெப்சீரிஸ் பக்கம் செல்லலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறாராம். அதற்கு முன்னால் போலீஸ் ஸ்டேஷன் செல்லலாமா என அவரை தட்டி தூக்க காத்துக்கொண்டிருக்கிறது சிபிஐ.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட விஷயம் இந்திய சினிமாவையே அதிர வைத்தது.
அதற்கு காரணமாக அவரது காதலி ரியா என்பவர் அவருக்கு போதை மருந்து கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கொலை செய்ததாக தற்போது கேஸ் திரும்பியுள்ளது.
இதற்காக அவரை சிறையில் வைத்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறமிருக்க போதைப் பொருள் பயன்படுத்தும் நடிகர்களின் லிஸ்ட் சமீபத்தில் எடுத்து விசாரித்து வருகிறது சிபிஐ.
இதில் ரகுல் பிரீத் சிங் மாட்ட அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம். ரகுல் ப்ரீத் சிங் சுஷாந்த் சிங், ராஜ்புத் காதலி ரியாவுக்கு நெருங்கிய நண்பர் எனவும், இருவரும் சேர்ந்து அடிக்கடி போதைப்பொருள் உட்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் எந்த நேரத்திலும் சிபிஐ ரகுல் பிரீத் சிங்கை கைது செய்ய வாய்ப்பு இருக்கிறதாம்.
