Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரகுல் பிரீத் சிங்கிற்கு ரகசியமாக வீடு வாங்கி கொடுத்தாரா பிரபல நடிகர்? இவங்க மேல அவருக்கு தனி அக்கரை போல!
கடந்த சில மாதங்களாகவே பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங் பற்றி பல்வேறு விதமான சர்ச்சைகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. போதைப்பொருள் பிரச்சினையை தொடர்ந்து தற்போது காதல் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
பிரபல இளம் ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டதன் பின்னணியில் போதைப்பொருள் விவகாரம் இருப்பதாக அறிந்த காவல்துறையினர், போதைப் பொருள் பயன்படுத்தும் நடிகைகளை அழைத்து விசாரணை நடத்தினார்.
அதில் ரகுல் பிரீத் சிங்கும் ஒருவர். இதனால் சிறையில் அடைக்கப்பட்ட விடுவாரோ என அவருக்கு பணம் கொடுத்த தயாரிப்பாளர்கள் அனைவரும் பயந்த நிலையில், எப்படியோ சாமர்த்தியமாக அந்த விஷயத்தில் இருந்து தப்பித்து விட்டார்.
அதனைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபல இளம் நடிகர் ஒருவருடன் ரகசியமாக ரகுல் பிரீத் சிங் காதல் வளர்த்து வருவதாகவும், இதனால் அந்த நடிகர் ரகுல் பிரீத் சிங்க்கு ரகசியமாக வீடு ஒன்றை பரிசளித்து தங்கவைத்து வருவதாகவும் செய்திகள் கிளம்பியது.

rakul-preet-singh-cinemapettai-01
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் சமந்தா நடந்தும் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இதற்கான விடையை தெரிவித்துள்ளார்.
ரகுல் பிரீத் சிங் கூறியதாவது, யாருக்காவது வீடு வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு பெரிய மனது இருக்கிறதா எனவும், அது தன்னுடைய சொந்த சம்பளத்தில் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை பற்றிய வதந்திகள் நாளுக்கு நாள் அதிகமாகவது வருத்தம் அளிக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ரகுல் பிரீத் சிங் கண்டிப்பாக ஒரு இளம் நடிகருடன் காதலில் இருக்கிறார் என அக்கட தேசத்து ஆட்கள் சூடம் ஏற்றி சத்தியம் செய்கிறார்கள். எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும்னு யாருக்குத் தெரியும்?
