fbpx
Connect with us

Cinemapettai

இது வாழ்க்கையை அழகாக்கும்.! ரசிகர்களுக்கு ரகுல் ப்ரீத் சிங்கின் அன்புக் கட்டளை

rakul-preet

News | செய்திகள்

இது வாழ்க்கையை அழகாக்கும்.! ரசிகர்களுக்கு ரகுல் ப்ரீத் சிங்கின் அன்புக் கட்டளை

இது வாழ்க்கையை அழகாக்கும்…ரசிகர்களுக்கு ரகுல் ப்ரீத் சிங்கின் அன்புக் கட்டளை

தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் ரகுல் ப்ரீத் சிங்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், கோலிவுட் மூலமாகத்தான் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தார். ஆனால், தெலுங்கு பேசும் நல்லுலகம் அவருக்கு வாய்ப்பு, வெற்றியுடன் ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்துக் கொடுத்தது. இதனால், அம்மணி தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கில் கொடிகட்டிப் பறந்தாலும் தென்னிந்தியாவின் முன்னணி சினிமா துறையான கோலிவுட்டில் வெற்றிகரமான நடிகையாக வலம் வரவில்லையே என்ற கவலையை தீரன் அதிகாரம் ஒன்று தீர்த்து வைத்திருக்கிறது.

இதனால், அம்மணி ரொம்பவே குஷியாக இருக்கிறார். அவசர அவசரமாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகாமல் நிதானமாக புராஜக்டுகளைத் தேர்வு செய்து வருகிறார். நிச்சயம் வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழிலும் முக்கியமான இடைத்தை விரைவில் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது நடிப்பால் ரகுல் ப்ரீத் சிங் முத்திரை பதித்திருக்கிறார். சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு அய்யாரி படம் மூலம் பாலிவுட் என்ட்ரி கொடுத்த அவர், தற்போது அஜய் தேவ்கான் மற்றும் தபு நடிக்கும் ரொமாண்டிக் காமெடி படம் ஒன்றில் பிஸியாக நடித்து வருகிறார். பிரபல தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிக்கும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்.

Rakul-Preet-Singh1

இவர் தனக்குப் பிடித்த விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார். உடல் நலத்தைப் பேணுவது குறித்தும் ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையும் இட்டிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை ஃபிட்னெஸ்தான் என்னுடைய வாழ்க்கை முறையே. உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். நீங்கள் உங்களை உடலை நேசித்தால் மட்டுமே நீண்ட ஆயுளுடன் உடல் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதற்கு மிகவும் இன்றியமையாதது உடற்பயிற்சி.

எனது விருப்பமான பொழுதுபோக்கு உடற்பயிற்சி செய்வது. மகிழ்ச்சியாக இருந்தாலும், துன்பத்தால் துவண்டு போயிருந்தாலும் உடற்பயிற்சி செய்வது எனக்கு மிகுந்த புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். அந்தவகையில் நீங்களும் உடற்பயிற்சி செய்து, ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று நெகிழ்ந்திருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். மக்களே நீங்கள் செய்வீர்களா?…

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top