Tamil Cinema News | சினிமா செய்திகள்
திருட்டுத்தனம் செய்து மறைக்க பார்த்த ரகுல் பிரீத் சிங்.. சுஷாந்த் சிங் கேசில் நெட்டு கட்டி வச்சு செய்யும் சிபிஐ
பெரும்பாலும் சினிமாவில் வில்லனாக நடிக்கும் நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் மிகவும் நல்லவர்களாக இருப்பார்கள். அதேபோல் சினிமாவில் நல்லவர்களாக நடிக்கும் நடிகர்கள் பெரும்பாலும் நிஜ வாழ்க்கையில் மிகவும் மோசமானவர்களாக இருப்பார்கள்.
அந்த வகையில் ஒன்னும் தெரியாத பாப்பா போல் தென்னிந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் ரகுல் பிரீத் சிங். பாலிவுட்டிலிருந்து வந்திருந்தாலும் அவருக்கு தென்னிந்திய சினிமா ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
அதன் விளைவு தற்போது பாலிவுட் சினிமாவில் ஓரளவு கவனிக்கப்படும் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ரகுல் பிரீத் சிங் மாட்ட அதிக வாய்ப்புள்ளது என செய்தி வெளிவந்துள்ளது.
இதனை எதிர்த்து ரகுல் பிரீத் சிங், தன் மீது வீண்பழி சுமத்துகிறார்கள் என கோர்ட்டில் கேஸ் போட்டார். ஆனால் தற்போது ரகுல் பிரீத் சிங் போதைப்பொருள் பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது.
பாலிவுட் இளம் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. ஆனால் அது தற்கொலை அல்ல கொலை என கேஸ் தற்போது வேற பக்கம் திரும்பியுள்ளது.
இதில் முக்கிய குற்றவாளியாக சுசாந்த்தின் காதலி ரியா சேர்க்கப்பட்டுள்ளார். இவர்தான் சுஷாந்த்க்கு போதை கொடுத்து கொன்றதாக பலவகையில் கேஸ் திரும்பியுள்ளது.
மேலும் பாலிவுட்டில் போதை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகமாகி விட்டதாகவும் வேறு ஒரு தகவல் கிடைத்தது. இதனை அலசி பார்கையில் ரியாவின் தோழியான ரகுல் பிரீத் சிங்க்கும் அதில் தொடர்பு இருப்பதாக தெரிகிறது.
ஏற்கனவே ரியாவுடன் சேர்ந்து சுஷாந்த் சிங் வீட்டில் ரகுல் பிரீத் சிங் போதை பொருள் எடுத்துக் கொண்டதை அங்கு பணியாளராக வேலை செய்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
