Connect with us

Cinemapettai

ஜாலியான புதையல் வேட்டை.. அவனே ஸ்ரீமன் நாராயணன் திரைவிமர்சனம்

Reviews | விமர்சனங்கள்

ஜாலியான புதையல் வேட்டை.. அவனே ஸ்ரீமன் நாராயணன் திரைவிமர்சனம்

KGF தொடர்ந்து ஐந்து மொழிகளில் வெளி வரும் கன்னட படம் அவனே ஸ்ரீமன் நாராயணன். கற்பனையான ஊர் மற்றும் காலகட்டத்தில் தங்கள் வசதிக்கேற்ப கதைக்களத்தை அமைத்துள்ளனர் இந்த டீம்.

கதை – பல வருடங்களாக புதியலை தேடிவருகிறது அதிரா என்ற கொள்ளைக்கூட்டம். எனினும் நாடக்குழு அதனை ரயிலில் இருந்து திருடிவிட்டு வரும் வழியில் அந்த தலைவன்கும்பலிடம் மாட்டுகின்றனர். அவர்களைக் கொன்றுவிடுகிறான் தலைவன், ஆனால் அந்தப் புதையல் இல்லை; அவர்கள் பதுக்கி விடுகின்றனர். அதைக்கண்டுபிடிப்பது அந்த நாடக கோஷ்டியின் குடும்பத்தை அழிப்பதாக சபதம் எடுக்கின்றனர் தலைவன்.

15 வருடம் கழித்து இன்றும் அந்த புதையலை தேடி வருகின்றனர் அவரின்   மகன்கள் ஜெயராம் மற்றும் துக்காராம். அதே ஊருக்கு போலீசாக வருகிறார் ரக்ஷித் ஷெட்டி. லோக்கல் செய்தித்தாளில் பணிபுரிகிறார்  ஹீரோயின் ஷானாவி ஸ்ரீவத்சா. தன் ஆதாயத்திற்கு ஏற்ற மாதிரி கேம் ஆடி அணைத்து தரப்பு ஆட்களிடமும் நற்பெயரையை எடுக்க முயற்சிக்கிறார் ஹீரோ. அவருக்கு துணையாக கான்ஸ்டபிள் அச்யுத் குமார். நாடாக்கும்பளின் குடும்பங்கள் பற்றிய முடிச்சுகளை அவிழ்க்கிறார் நம் ஹீரோ.

வாரிசுச் சண்டையில் ஜெயித்தது யார்? நாடக்குழுவின் தேவை என்ன? ஹீரோவின் உண்மையான நோக்கம் என்ன? புதையல் இறுதியில் கிடைத்ததா இல்லையா? என்பதனை சுவாரஸ்யமாக சொல்வதே மீதி கதை.

பிளஸ் – திரைக்கதை, மேக்கிங் ஸ்டைல், பின்னணி இசை, ரக்ஷித் ஷெட்டி

மைனஸ் – படத்தின் ஓடும் நேரம், சிம்பிளான கதை

சினிமாபேட்டை அலசல் – ஃபேண்டஸி கலந்த காமெடி படம் எடுக்க முயன்று அதில் வெற்றியும் கண்டுள்ளனர் இந்த டீம்.

Pirates of the Caribbean

ஹீரோ கதாபாத்திரம் பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் ஜானி டெப் அவர்களை மனதில் வைத்தே எழுதியுள்ளனர். மேலும் நம் படங்களான சிம்புதேவனின் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் மற்றும் வசந்தபாலனின் காவியத்தலைவன் படங்களின் தாக்கமும் பல இடங்களில் உள்ளது.

kollywood

சினிமாபேட்டை வெர்டிக்ட் – முழுவதுமாக கன்னட நடிகர்களை நடிக்கவைத்ததிற்கு பதில், பிற மொழி நடிகர்களையும் டீம்மில் இணைத்திருந்தால் அது படத்திற்கு இன்னும் அதிக ரீச் கிடைக்க உறுதுணையாக இருந்திருக்கும். எனினும் டப்பிங் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் கடவுளின் அவதாரம், பாற்கடல் கடைவது என நம்ம ஊர் விஷயங்களையும் புகுத்தியதற்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

முழு படமாக பார்க்கும்பொழுது மெதுவாக ஆரம்பித்து, பின்னர் வேகம் எடுத்து நம்மை திருப்த்தியே படுத்துகிறான் இந்த நாராயணன்.

சினிமாபேட்டை ரேட்டிங் 3 / 5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top