மதுர 2004 -ம் ஆண்டு ரமணா மாதேஷ் இயக்கத்தில், விஜய்,ரக்சிதா, சோனியா அகர்வால், தேஜா ஸ்ரீ, வடிவேலு மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்த காதல், அதிரடி மற்றும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

rakshitha

தளபதி விஜயுடன் ‘மதுர’ மற்றும் சிம்புவுடன் ‘தம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரக்சிதா. இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் பின்னர் கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்திருக்கிறார் ரக்சிதா.

பின்னர் பட வாய்ப்புகள் குறைந்த போகவே அரசியலில் ஒரு கை பார்க்க களம் இறங்கினார்.

rakshitha

முதலில் பி.எஸ்.ஆர் காங்கிரசில் இருந்தவர் பின்னர் ‘குத்து’ ரம்யாவிற்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியில் கங்கிரசுக்கு எதிராக களம் இறக்கப்பட்டார்.

இருந்தும் அரசியலில் பெரிதாக ஜொலிக்க முடியாத ரக்சிதா, கன்னட நடிகர் ப்ரேமை கல்யாணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

rakshitha

கல்யாணம் ஆன சில வருடங்களிலேயே உடல் பெருத்து இவரா இது? என்னும் அளவிற்கு மாறிப்போனார் ரக்சிதா. இந்நிலையில் கால் எலும்பு முறிந்து தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

rakshitha

கால் முறிவிற்கு கட்டு போடப்பட்டு மருத்துவமனையில் உள்ளது போல் ஒரு போட்டோவை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார் ரக்சிதா.
அதில் மதுர படத்தில் ‘சிக்கென்று’ இருந்த நடிகை ரக்சிதா தானா? இவர் என்னும் அளவிற்கு இருக்கிறார்.