பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாகத் திகழ்பவர் ராக்கி சாவந்த். மேலும் அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார். இவர் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருவதுண்டு.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட இவர் பிரதமர் மோடியின் உருவப்படம் பொறித்த ஆடை அணிந்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்திருந்தார். இதனால் இவர் மீது வழக்கு கூட பாய்ந்தது.
இந்த நிலையில் இப்போது, அரசியலிலும் நிலைக்காமல், சினிமா மார்க்கெட்டும் இல்லாமல் இருக்கும் இவர், அவ்வப்போது மற்ற நடிகைகளை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து அவ்வப்போது பலரது திட்டுகளை வாங்கிக் கொண்டு வருகிறார் இவர்.
அந்த வகையில், தற்போது ஹாலிவுட் வரை பிரபலமாகி இருக்கும் பிரியங்கா சோப்ராவை பற்றி சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார்.

அதிகம் படித்தவை:  விஜய்யா? அஜித்தா? சட்னா ஓபன் டாக்

நடிகை பிரியங்கா சோப்ரா ‘மாதம் ஒரு காதலருடன் இருக்கிறார்’ என்று பேசி புது சர்ச்சையை கிளப்பி விட்டு இருக்கிறார் ராக்கி சாவந்த்.

அதிகம் படித்தவை:  சுந்தர் சி இயக்கும் பிரம்மாண்ட படமான சங்கமித்ரா படத்தின் கதை இதுதான்
ராக்கி சாவந்த்தின் இந்த கருத்து பாலிவுட் வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் பிரியங்கா சோப்ரா தரப்பினர் ராக்கி மீது கடும் கோபத்தில் உள்ளனர். பிரியங்காவின் ரசகர்கள் சிலர் ராக்கியை சமூக வலைத்தளங்களில் திட்டி தீர்த்து வருகின்றனர்.