ராஜு முருகன்

Rajumurgan

பத்திரிகையாளராக இருந்து இயக்குனரை ஆனவர். குக்கூ, ஜோக்கர் என் இரண்டு படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாது கார்த்தியின் தோழா படத்திற்கு வசனம் எழுதினர். இதுமட்டுமல்லாது துருவ் விக்ரம் நடிப்பில், பாலா இயக்க இருக்கும் ‘அர்ஜுன் ரெட்டி’யின் தமிழ் ரீமேக்கான ‘வர்மா’ படத்திற்கு வசனம் எழுதுகிறார் ராஜுமுருகன்.

இந்நிலையில் இவர் நடிகரை ஜீவாவை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியானது .

new movie

சமூக பிரச்சனையை மையப்படுத்தி, தற்பொழுதுள்ள சூழலுக்கு ஏற்ற மாதிரி திரைக்கதையை உருவாக்கி இருக்கிறாராம் ராஜு முருகன். இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தற்போது ‘கொரில்லா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜீவா. அதன்பிறகு இந்தப் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

jeeva gurillea movie

இந்நிலையில், ஜீவா நடிக்க இருக்கும் இந்த புதிய படத்தின் தலைப்பை நள்ளிரவு 12.01 மணிக்கு அறிவித்தது படக்குழு.

GYPSY Movie

“ஜிப்ஸி” என்பது தான் படத்தின் டைட்டில் !

இந்தப் படத்தில் நடிக்கும் ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் மற்ற தகவல்கள் வெளியாகும்.