Tamil Cinema News | சினிமா செய்திகள்
பேரன்பு பார்த்துவிட்டு தோழர் (இயக்குனர்) ராஜூமுருகன் பதிவிட்ட அழுத்தமான ஸ்டேட்டஸ்.
பேரன்பு
இயக்குனர் ராம் வித்யாசமான கதைக்களம், ஜனரஞ்சகமான சூழல், ரியாலிட்டிக்கு அருகாமையில் பயணிப்பது தான் இவரின் ஸ்டைல். “பேரன்பு” மம்முட்டி, அஞ்சலி, சாதனா (தங்கமீன்கள்), சமுத்திரக்கனி, மையக்கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம். யுவன் இசை. தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு.

peranbu
எழுத்தாளர் ராஜு முருகன். இவருடைய படைப்புகளான வட்டியும், முதலும், ஒன்று, ஜிப்ஸி போன்றவை ஆனந்த விகடன் இதழில் வெளியிடப்பட்டவையாகும். தமிழ் சினிமாவில் ‘குக்கூ’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்.யதார்த்த சினிமாவை எடுப்பவர் மற்றும் விரும்புபவர்.
'பேரன்பு' கடவுள் குறித்தான கேள்விகளையும் இயற்கை பற்றிய ஆச்சர்யங்களையும் நமக்குள் எழுப்பிக் கொண்டேயிருக்கிறது. இதுவரை பேசாப் பொருளை பேசியிருக்கிற ராம் சாருக்கும், இயற்கையை அள்ளித் தந்திருக்கிற நண்பன் தேனி ஈஸ்வருக்கும், படக்குழுவினர் அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்!@Director_Ram pic.twitter.com/1CoC12pri1
— Director Rajumurugan (@Dir_Rajumurugan) February 11, 2019
இவர் பேரன்பு பார்த்துவிட்டு இயக்குனர் ராம், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் மற்றும் படக்குழுவை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
