Politics | அரசியல்
இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த்.
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தலைவர் கருணாநிதி அவர்களின் முக்கிய உறுப்புகள் நேற்று முன் தினம் இருந்தே செயல் இழக்க தொடங்கியது. நேற்று மாலை அவர் உடல் நிலை மிகவும் மோசமாகியது. உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் மருத்துவனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதலாக போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் நேற்று மாலை 6.10 மணிக்கு உடல்நலக் குறைவால் காலமானார் என அறிவித்தனர் . அவரை இழந்த சோகத்தில் கருணாநிதியுன் குடும்பத்தினர், திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் கதறி அழுதனர்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் இந்த தினத்தை தான் மறக்க முடியாத கருப்பு நாள் என்று ட்விட்டரில் பதிவிட்டார்.
என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள்.
அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்
— Rajinikanth (@rajinikanth) August 7, 2018
மேலும் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை
— Rajinikanth (@rajinikanth) August 7, 2018
