Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Nadu | தமிழ் நாடு

ரஜினி வெட்டிய கேக், சிம்பு கொடுத்த பரிசு, ஷாருக்கானின் கலக்கல் ட்வீட்- தலைவர் 70 தாறுமாறு

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் வந்துபோனாலும் ஒரு சிலர் மட்டுமே மக்களின் மனதிலும், வீடுகளிலும் நீங்காத இடத்தை பிடிப்பர். அப்படி ஒருவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பட்டி தொட்டி எங்கும் பிரபலம், உலகளவில் ரசிகர்கள் உடையவர். இன்றும் ஹீரோவாக நடித்து அசத்துபவர்.

இந்த பிறந்தநாளன்று ரஜினிகாந்த் அவர்கள் சென்னையில் இல்லாதது பலருக்கு வருத்தம் தான். தன் குடும்பத்துடன் பெங்களுருவில் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். அங்கிருந்து அப்படியே ஹைதெராபாத் சென்று அண்ணாத்தே படப்பிடிப்பில் டிசம்பர் 15 முதல் பங்கேற்கிறார்.

இவர் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய போட்டோவை சௌந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த கேக் வாசகம் அரசியல் கோட்பாடுதான் இருந்தது.

rajnikanth birth day cake

இப்போ இல்லனா எப்பவும் இல்ல; என்பதை வலியுறுத்தும் ஆங்கில வாசகம் உடைய கேக்கை வெட்டி ரஜினிகாந்த் கொண்டாடியுள்ளார். அரசியலில் களமிறங்கப்போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், “இப்போ இல்லனா எப்பவும் இல்ல”, “மாத்தனும் எல்லாத்தையும் மாத்தனும்” ; என்ற இந்த இரண்டு வாசகத்தையே தொடர்ச்சியாகப் பதிவு செய்து வருகிறார்.

தலைவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் சிம்பு. இது ஊர் அறிந்த விஷயம் தான். இவர் ரஜினிகாந்த் மலர்க்கொத்து அனுப்பியுள்ளார் பிறந்தநாளை முன்னிட்டு. அதில் “ஹாப்பி பர்த்டே தலைவா. லவ் யூ, என்றுமே உங்கள் ரசிகன் இந்த சிலம்பரசன்” என்பதனையும் எழுதியுள்ளார்.

str s gift to superstar

பாலிவுட்டின் பாஷா நம் கோலிவுட்டின் பாஷா ரஜினிக்கு ட்விட்டரில் வாழ்த்தை பகிர்ந்தார். பிறந்தநாளுக்கு ரஜினியின் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார் ஷாருக் கான் . மேலும் தலைவர் ஒருவர் தான் எனவும், அவருக்கு உடல் ஆரோக்யமும், மகிழ்ச்சியும் கிடைக்கட்டும் எனவும் கூறியுள்ளார்.

SRK tweet

Continue Reading
To Top