Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினிக்கு சொல்லிய கதையில், வேற ஹீரோவை வைத்து இயக்கிய கவுதம் மேனன்.. எந்த படம் தெரியுமா?
நெக்ஸ்ட் ஜென் இயக்குனர்களில் தனது ஸ்டைலிஷ் பிலிம் மேக்கிங் வாயிலாக கோலிவுட் ரசிகர்களை கட்டிப்போட்டது எனில் அது கவுதம் மேனன் என்பது கோலிவுட்டில் அனைவருக்கும் தெரியும். வெவ்வேறு ஜானரில் படங்கள், அழகான தமிழ் தலைப்பு என்பது இவரின் ஸ்டைல்.
மேலும் சமீபத்தில் சில ஆண்டுகளாக கோலிவுட்டில் இவர் பெயர் டேமேஜ் ஆகிவிட்டது என்னவோ உண்மை தான். ஒருபுறம் பட தயாரிப்பில் இறங்கி சிக்கலில் மாட்டினார், மறுபுறம் இவர் இயக்கிய படங்களும் ரிலீஸ் ஆகாமல் பெரிய போராட்டக்களம் ஆனது.
இந்நிலையில் இவர் சினிமா துறையில் நுழைந்து 20 வருடங்கள் ஆகியுள்ளது. இதனை முன்னிட்டு பிரபல வார இதழின் யூ ட்யூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அதில் சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்தார்.
அதில் கபாலி பட நேரத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்தாக சொல்லியுள்ளார். கலைப்புலி தாணு அவர்கள் தயாரிப்பில் ரஜினியை இயக்கும் படம் பற்றிய டிஸ்கஷன் தானாம், முழு கதையையும் ரஜினிக்கு சொல்லியுள்ளார் இயக்குனர்.
கவுதம் தனது அம்மாவிடம் மட்டும் சூப்பர் ஸ்டார் படம் இயக்கும் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது என சொல்லியுள்ளார். எனினும் மாலை தயாரிப்பாளர் தரப்பிடம் இருந்து, இந்த படம் வேண்டாம் என சொல்லப்பட்டதாம்.

dhruva natchathiram
ரஜினிக்கு கவுதம் துருவநட்ச்சத்திரம் கதையை தான் சொன்னாராம். ரஜினி மட்டும் ஓகே சொல்லியிருந்தால் ஸ்டைலிஷான படமாக அது வந்திருக்கும் என பேட்டியில் சொல்லியுள்ளார் கெளதம் மேனன்.
முன்பே சூர்யா ரிஜெக்ட் செய்து, விக்ரம் ஓகே சொல்லி எடுக்கப்பட்ட இப்படம் பல பிரச்சனை காரணமாக ரிலீஸ் ஆகாமல் தான் ஐந்து வருடங்களாக கிடப்பில் உள்ளது.
