India | இந்தியா
சின்மயி போட்ட ஒரே டுவிட் தான்.. வைரமுத்துவின் டாக்டர் பட்டம் காலி
சின்மயி போட்ட ஒற்றை டுவிட் வைரமுத்துவுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்க இருந்த டாக்டர் பட்டம் காலியானது.
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகம் கவிஞர் வைரமுத்துவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை இன்று ( 28ம் தேதி) வழங்குவதாக இருந்தது. இந்த டாக்டர் பட்டத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்க இருந்தார். இதை கேள்விப்பட்ட சின்மயி, டுவிட்டரில் ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார்.
அந்த பதிவில் அவர், 9 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வைரமுத்துவுக்கு பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் பட்டம் வழங்கப்போகிறாராம். நான் ஒன்றை இங்கே மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்களுக்கு எந்த சேதமும் இல்லை. ஆனால் வெளியில் சொன்ன எனக்குத்தான் பணியாற்றும் வாய்ப்பு தடுக்கப்பட்டுள்ளது என்று குமுறி இருந்தார்.
இந்த விஷயம் ராஜ்நாத் சிங்கிற்கு தெரிந்ததோ என்னவோ, அவர் டாக்டர் பட்டம் வழங்க வருவதை தவிர்த்துவிட்டார். அத்துடன் சின்மயி கூறிய புகாரால் வைரமுத்து மீண்டும் தலைப்பு செய்தியாகிவிட்டார்.
