வளர்த்த கெடா மாரில் முட்டியது.. வேதனையில் ராஜ்கிரணின் பதிவு

நேற்று இணையத்தில் மிகவும் அதிர்வலையை ஏற்படுத்தியது ராஜ்கிரணின் மகள் ஜீனத் பிரியா சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டதாக வெளியான செய்தி. அதிலும் ராஜ்கிரணுக்குக்கு பிடிக்காமல் இந்த திருமணம் நடந்ததாக செய்திகள் வெளியாகி வந்தது.

சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் முனீஸ் ராஜா. இவருக்கும் ஜீனத் பிரியாவிற்கும் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டு அதன் பின்பு காதலித்து முனீஸ் ராஜா பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Also Read :ராஜ்கிரணின் மகளை திருமணம் செய்து கொண்ட காமெடி நடிகர்.. மதம் பிரச்சனைகளை சமாளித்த காதல் ஜோடி

இந்நிலையில் ராஜ்கிரண் இந்த திருமணம் குறித்த ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது என் மகளை சீரியல் நடிகர் கல்யாணம் செய்து கொண்டதாக இணையத்தில் ஒரு தவறான செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. இதைப் பற்றி என்னுடைய ரசிகர்களுக்கு உண்மையை விளக்க வேண்டிய கடமை உள்ளது.

எனக்கு திப்பு சுல்தான் என்கிற நைனார் முகமது என்ற ஒரே ஒரு மகன் தவிர வேறு பிள்ளைகள் கிடையாது. இந்து மதத்தைச் சேர்ந்த பிரியா என்ற மகளை வளர்த்து வந்தேன். ஆனால் அவர் மனம் புண்படக் கூடாது என்பதற்காக எங்கும் வளர்ப்பு மகள் என்றதை நான் சொன்னதே கிடையாது.

Also Read :ராஜ்கிரண் கல்லாகட்டிய 5 திரைப்படங்கள்.. நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என அசத்திய 2 படங்கள்

ஒரு சீரியல் நடிகர் பிரியாவை முகநூல் மூலம் நட்புக் கொண்டு தன்வசபடுத்தி, கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு கொண்டு வந்துள்ளார். இந்த செய்தி என் காதுக்கு வந்ததும் நான் விசாரித்தபோது, அவர் மகா மட்டமான புத்தியும், பணத்துக்காக எதையும் செய்பவர் என்பது தெரிய வந்தது.

அந்த நடிகரின் நோக்கம் பெண்ணை வைத்து வாழ வைப்பதில்லை, எனக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி சீரியல் வாய்ப்புக்காக இவ்வாறு செய்துள்ளார். இதை என் வளர்ப்பு மகளிடம் சொன்னாலும் அவர் காதில் வாங்குவதாக இல்லை. அதுமட்டுமின்றி ஒரு தரமான மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து இருந்தால் சாதி, மதம் பார்க்காமல் நான் சந்தோசமாக கட்டிக் கொடுத்திருப்பேன்.

Also Read :இருவரின் வளர்ச்சியை பார்த்து மிரண்ட ரஜினிகாந்த்.. சூப்பர் ஸ்டாரை காப்பாற்றிய ராஜ்கிரண்

ஆனால் அந்த சீரியல் நடிகர் தனது குள்ளநரி தனத்தால் வளர்ப்பு மகளை வசப்படுத்தி உள்ளார். மேலும் என் வளர்ப்பு பெண்ணிற்கு அவர் கணவனால் கூட, எனக்கு எந்த காலத்திலும் மருமகனாக முடியாது. இவர்களுக்கும் என் குடும்பத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என வளர்த்த கெடா மாரில் முட்டியது போல மனவேதனையுடன் ராஜ்கிரண் பதிவிட்டுள்ளார்.