fbpx
Connect with us

Cinemapettai

ராஜ்கிரண் இயக்கி தயாரித்து தூள் கிளப்பிய படங்கள்! நிஜமாவே திறமையான மனுஷன் தான்!

Entertainment | பொழுதுபோக்கு

ராஜ்கிரண் இயக்கி தயாரித்து தூள் கிளப்பிய படங்கள்! நிஜமாவே திறமையான மனுஷன் தான்!

தமிழ் சினிமாவில் 25 படங்களுக்கும் மேலாக கதாநாயகனாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ராஜ்கிரண். இவருடைய இயற்பெயர் ஜே.மோகிதீன் அப்துல் காதர் சினிமாவிற்காக தனது பெயரை ராஜ்கிரன் என்று மாற்றிக் கொண்டார்.

ராமராஜ் நடிப்பில் வெளியான ‘ராசாவே உன்னை நம்பி’, ‘என்னை பெத்த ராசா’ இரண்டு படங்களையும், தன்னுடைய படமான ‘என் ராசாவின் மனசிலே’ படத்தையும் தயாரித்து சூப்பர் ஹிட் கொடுத்தவர் ராஜ்கிரண்.

நடித்து தயாரித்த ராஜ்கிரணுக்கு இயக்கத்திலும் ஆர்வம் ஏற்பட, தனது சொந்த தயாரிப்பிலேயே 1993ஆம் ஆண்டு ‘அரண்மனைக்கிளி’ படத்தில் இயக்குனராக களமிறங்கினார்.

இந்தப் படத்தை காதலை மையமாக வைத்து, அஹானா கதாநாயகியாகவும் ராஜ்கிரன் கதாநாயகனாகவும் வித்தியாசமான கம்போவில் உருவாக்கப்பட்டது. மேலும் வடிவேலின் நகைச்சுவை இந்தப் படத்திற்கு கூடுதல் வலுசேர்க்கும்.

ராஜ்கிரணின் பன்முக திறமையினால் உருவாக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று திரையரங்கில் தாறுமாறாக ஓடியது. தமிழில் மெகா ஹிட் கொடுத்த இந்தப் படத்தை கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடிப்பில் ‘நீலகண்டா’ என்ற பெயரில் படமாக்கப்பட்டது. அங்கும் சூப்பர் ஹிட் கண்டது.

அரண்மனைக்கிளி முழு படம் பார்க்க: YouTube

1995 ஆண்டு “எல்லாமே என் ராசாதான்” என்ற படத்தை இயக்கி ரசிகர்களுக்கு விருந்தளித்தார் ராஜ்கிரண். இளையராஜா இசை அமைத்து, ராஜ்கிரான், சங்கீதா, ரூபா ஸ்ரீ ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். காதல் மனைவியை கொன்றவரை பழி தீர்க்கும் அன்பு கணவனின் கதை தான் இந்த படம்.

திரையரங்கில் பட்டையை கிளப்பி இந்த படமானது, பாக்ஸ் ஆபீஸில் வெற்றியை கண்டதும் மட்டுமல்லாமல் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது.அதன்பின் இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு, சூப்பர் ஹிட் கொடுத்தது.

எல்லாமே என் ராசாதான் முழு படம் பார்க்க: YouTube

ராஜ்கிரண் 90களில் நடிப்பில் மட்டும் சிறந்த விளங்காமல், தயாரித்து இயக்குவதிலும் தூள் கிளப்பியிருக்கிறார் என்பதுதான் உண்மை. நிஜமாவே திறமையான மனுஷன் தான் என்று ரசிகர்கள் இவரை தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர்.

Continue Reading
To Top