டெல்லி: டெல்லியிலுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள டிவியில் ஆபாச வீடியோ ஒளிபரப்பான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ராஜிவ் சவுக் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள எல்இடி டிவியில் சுத்தமாக ஆடையே இல்லாமல் பெண்ணும், ஆணும் உடலுறவு கொள்ளும் காட்சி, அப்படியே ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த டிவி என்பது விளம்பரங்களை ஒளிபரப்ப வைக்கப்பட்டுள்ளது. ஆனால் திடீரென ஆபாச காட்சிகள் ஓடத் தொடங்கியுள்ள.

ஓட்டம் பிடித்த பெண்கள்

சிலர் அவசரமாக அதை கவனிக்காமல் நடந்து சென்றுள்ளனர். சில பயணிகள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து, தங்கள் செல்போனில் வீடியோவாக பிடித்துள்ளனர். பெண்களோ இதை பார்த்து, தலையில் அடித்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். சில ஆண்கள் துணியை எடுத்து டிவியை மூட முயன்றுள்ளனர்.

வைரல் வீடியோ

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் இன்று வைரலாக ஷேராகி வருகின்றன. இதுகுறித்து டெல்லி மெட்ரோ ரயில் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இந்த சம்பவம் குகறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ஆன்லைனில் ஷேர் செய்யப்பட்டுள்ளது உண்மைதானா என்பது குறித்து விசாரிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

வைரல் வீடியோ

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் இன்று வைரலாக ஷேராகி வருகின்றன. இதுகுறித்து டெல்லி மெட்ரோ ரயில் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இந்த சம்பவம் குகறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ஆன்லைனில் ஷேர் செய்யப்பட்டுள்ளது உண்மைதானா என்பது குறித்து விசாரிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

விசாரணை

“டெல்லி மெட்ரோ நிர்வாகம் இந்த காட்சி ஒளிபரப்பானது குறித்து அறிந்திருக்கவில்லை. இந்த டிவி விளம்பரம் ஒளிபரப்பும் உரிமை, தனியார் கான்ட்ராக்டருக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் அந்த வேலை முழுமையாக கூட முடியவில்லை. இப்போது யார் இந்த வேலையில் ஈடுபட்டது என்பது புரியவில்லை” என்று, செய்தித்தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

கேரளாவிலும்

இப்படி இன்று மாலை நிலவரப்படி, காகவல்துறைக்ககு இதுகுறித்து புகார் எதுவும் வரவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம், சிஐஎஸ்எப் படைகள் வட்டாரத்தில் விசாரித்தபோது நடந்த சம்பவம் உண்மைதான் என தெரியவந்துள்ளது. கேரளாவின் கல்பெட்டா பஸ்ஸ நிலையத்தில் உள்ள டிவியில் ஆபாச படம் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் 2015ல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.