கர்ணன் பட நடிகையை தூக்கிட்டு வாங்க.. கட்டளையிட்ட தெலுங்கு நடிகர்

தமிழ் சினிமாவில் பிரபலமாகும் நடிகைகள் தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் ஒப்பந்தம் ஆவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவுக்குள் அப்படி ஒரு பந்தம் உள்ளது.

அங்கே வெற்றி நாயகியாக வலம் வருபவர்களை தமிழ் சினிமாவுக்கு கூட்டி வருவதும், தமிழ் சினிமாவில் பிரபலமாகுபவர்கள் தெலுங்கு சினிமாவுக்கு செல்வதும் வழக்கமான ஒன்றுதான்.

அந்த வகையில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கர்ணன் படத்தின் மூலம் சென்சேஷனல் நாயகியாக மாறியுள்ளார் பிரபல மலையாள நடிகை ரஜிஷா விஜயன்.

பார்ப்பதற்கு மப்பும் மந்தாரமாக இருக்கும் இந்த நடிகையின் மீது தான் தற்போது தெலுங்கு நடிகர்களின் பார்வை விழுந்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றிப்படம் கொடுத்த ரவி தேஜா நடிக்கும் அடுத்த படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

மலையாள சினிமாவில் எதார்த்த படங்களில் நடித்து வந்த ரஜிஷா விஜயனுக்கு கர்ணன் படத்திலும் அப்படி ஒரு கதாபாத்திரம் கிடைத்ததால் தன்னுடைய திறமையை நிரூபித்தார். ஆனால் தெலுங்கு சினிமாவில் மசாலா படங்களே அதிகம்.

அந்த வகையில் மசாலா ஸ்டார் நடிகராக வலம் வரும் ரவி தேஜா படத்தில் நடித்தால் அதன்பிறகு அவர் சில வருடங்களில் காணாமல் போய்விடுவார் என்று அவருக்கு பலரும் அறிவுரை கூறி வருகின்றனர். இருந்தாலும் தெலுங்கில் என்ட்ரி ஆவதில் உறுதியாக உள்ளாராம் ரஜிஷா விஜயன்.

rajisha-vijayan-cinemapettai-01
rajisha-vijayan-cinemapettai-01
- Advertisement -spot_img

Trending News