புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

பாண்டியனின் மகளைக் குறி வைத்த ராஜியின் சித்தப்பா.. குமரவேலுக்கு ஆசையை தூண்டி விட்டு பழிவாங்கும் சக்திவேல்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், வந்த மூன்று மருமகளால் பாண்டியன் குடும்பம் தற்போது ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் அடைந்து எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்று சொல்வதற்கு ஏற்ப அனைவரும் சேர்ந்து கோவிலுக்கு போய் இருக்கிறார்கள். அங்கே பாண்டியனுக்கு பிறந்தநாள் என்பதால் பூஜைக்கு கொடுத்து அனைவரும் ஒட்டுமொத்தமாக பிரார்த்தனை செய்கிறார்கள்.

அங்கே வந்த சக்திவேல் மற்றும் குமரவேலு, இவர்களிடம் எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டு அனைத்தையும் நின்னு வேடிக்கை பார்க்கிறார்கள். இதுதான் சான்ஸ் என்று பாண்டியன், சக்திவேலை குத்தி காட்டும் விதமாக இந்த ஊருக்கு வரும்போது நான் அனாதையாக தான் வந்தேன். கையில் ஒன்றும் இல்லாமல் இருந்த பொழுது எல்லோரும் கேலியும் கிண்டலும் பண்ணினார்கள்.

பாண்டியனின் மகள் அரசியை கண்ணு வைத்த சக்திவேல்

ஆனால் இப்பொழுது சொந்தமாக வீடு, கடை, எனக்கென்று சொத்து வசதி என அனைத்தும் என்னிடம் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அதைவிட உயர்ந்ததாக என்னுடைய குடும்பம் எனக்கு மன நிறைவாக ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் கொடுத்து இருக்கிறார்கள். இப்பொழுது நான் தான் எல்லாருடைய அதிர்ஷ்டசாலி என்று சக்திவேலை குத்தி காட்டி பேசும் விதமாக பாண்டியன் அங்க வச்சு தரமான சம்பவத்தை செய்து விட்டார்.

அத்துடன் இன்னும் சக்திவேலை வெறுப்பேற்றி காட்ட வேண்டும் என்பதற்காக கோமதி பக்கத்தில் நின்னு ஜோடியாக போட்டோ எடுக்க சொன்னார். அப்பொழுது அரசி, பாண்டியன் மற்றும் கோமதியை சேர்த்து வைத்து ஜோடியாக போட்டோ எடுக்கிறார். மேலும் ஒட்டுமொத்த குடும்பத்தையும் சேர்ந்து அங்கு வந்த நபரை வைத்து போட்டோ எடுத்து சந்தோசமாக தருணத்தை கொண்டாடி வருகிறார்கள்.

இதையெல்லாம் பார்த்து வயித்தெரிச்சல் படும் சக்திவேல், பாண்டியனை பழிவாங்காமல் விடக்கூடாது என்று நினைக்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் அந்த கூட்டத்தில் சந்தோஷமாக இருந்த அரசியை பார்த்து கையில வெண்ணைய வச்சுக்கிட்டு நெய்க்கு ஏன் நம்ம அலையனும் என்று குமரவேலுமிடம் சொல்லுகிறார். இது எதுவும் புரியாத குமரவேலு என்ன சொல்லுறீங்க புரியலப்பா என்று கேட்கிறார்.

அப்பொழுது சக்திவேல், நம்ம விட்டுப் மகளை கூட்டிட்டு போயி நம்மள அசிங்கப்படுத்தி தற்போது உனக்கு பொண்ணு கொடுக்காத படி ஆக்கிவிட்டார்கள். ஆனால் அவங்க வீட்டிலேயே உனக்கு முறை பொண்ணு அரசி இருக்கிறாள். அதனால் அரசியை கல்யாணம் பண்ணி விட்டால் அதுதான் பாண்டியன் குடும்பத்திற்கு கொடுக்கும் பதிலடியாக இருக்கும் என்று குமரவேலு மனதில் ஒரு ஆசையை தூண்டி விட்டு விட்டார்.

குமரவேலுக்கும் பொண்ணு தற்போது கிடைக்கவில்லை என்பதால் அப்பா ஐடியா சரியாக இருக்கும் என்று வலுக்கட்டாயமாக அரசி கழுத்தில் குமரவேலு தாலி கட்டி விடுவார். அந்த வகையில் குமரவேல் மற்றும் ராஜியின் சித்தப்பா சக்திவேல் இருவரும் சேர்ந்து பாண்டியன் மகள் அரசியை குறி வைத்து விட்டார்கள். அதனால் இனி அடுத்த ஒரு சம்பவமாக ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து கண்ணீர் வடிக்கும் விதமாக அரசிக்கு அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News