புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பாண்டியன் மகளுக்கு வலை விரித்த ராஜியின் அண்ணன்.. சக்திவேலுவின் வன்மம், குமரவேலு செய்யப்போகும் சம்பவம்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், சக்திவேல் பொறுத்தவரை அண்ணனிடம் இருக்கும் சொத்து அனைத்திற்கும் வேறு யாரும் உரிமை கொண்டாட கூடாது. எல்லா சொத்தும் நமக்கும் நம் பையனுக்கு மட்டும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவ்வப்போது முத்துவேலுவிடம், பாண்டியன் குடும்பத்தை பற்றி தவறாக பேசி ராஜி மற்றும் கோமதியின் திருட்டு கல்யாணத்தைப் பற்றி சொல்லி முத்துவேலு எப்போதுமே மகள் பற்றி நினைக்க கூடாது என்பதற்காக வன்மத்தை திணித்துக் கொண்டு வருகிறார்.

அத்துடன் பாண்டியன் குடும்பமும் சந்தோஷமாக இருந்து விடக்கூடாது என்ற நினைப்பில் பழி வாங்குவதற்காக துடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய மகனுக்கு பொண்ணு கிடைக்க மாட்டேங்குது. அதற்கு காரணம் பாண்டிய குடும்பம் தான் என்ற நோக்கத்தில் குமரவேலுமிடம் பாண்டியன் குடும்பத்தில் உனக்கு என்று ஒரு பொண்ணு இருக்கிறது.

எப்படி நம் வீட்டில் இருக்கும் இரண்டு பெண்களை திருட்டு கல்யாணம் பண்ணினார்களோ, அதே மாதிரி பாண்டியன் குடும்பத்தில் இருக்கும் பெண்ணை நீ திருட்டு கல்யாணம் பண்ணி விடு என்று ஐடியா கொடுக்கிறார். அதற்கேற்ற மாதிரி அரசியும் வீட்டு வாசலில் நின்று தோழியுடன் சிரித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கும் பொழுது சக்திவேலு, குமரவேலுவை கூப்பிட்டு உனக்கு வேறு எங்கும் இனி பொண்ணு கிடைக்காது.

அதனால் நேரத்தை வீணடிக்காமல் பாண்டியன் மகளை கல்யாணம் பண்ணி விடு என்று ஐடியா கொடுக்கிறார். அதன்படி குமரவேலுவும் அப்பா சொல்வது சரிதான் நமக்கு கல்யாணம் நடக்க வேண்டும். அதே நேரத்தில் பாண்டியன் குடும்பத்தையும் பழிவாங்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே ஒரு வழி அரிசியை கல்யாணம் பண்ணி மொத்த குடும்பத்தையும் தனக்கு அடிமையாக ஆக்க வேண்டும் என்று சம்பவத்துக்கு தயாராகி விட்டார்.

அந்த வகையில் அசர நேரத்தில் சம்பவம் செய்யும் விதமாக அரசி கழுத்தில் தாலி கட்டி பாண்டியன் குடும்பத்திற்கு பெருந்துன்பதை கொடுக்கப் போகிறார். அடுத்ததாக செந்தில், மீனாவின் அப்பாவிடம் சொன்னது படி அரசு உத்தியோகத்தை கைப்பற்ற வேண்டும் என்று மீனா எக்ஸாமுக்கு படிப்பதற்கு ஐடியா கொடுக்கிறார். அதன் படி வரப் போற எக்ஸாமில் பரீட்சை எழுதி வெற்றி பெற வேண்டும் என்று ஊக்குத்துடன் பேசுகிறார்.

அடுத்து ராஜி தன்னுடைய அம்மாவையும் அப்பத்தாவையும் பார்க்க வைத்து பேச வைத்ததற்கு ரொம்ப நன்றி என கதிருக்கு நன்றி தெரிவித்து இருவரும் மனம் விட்டு பேசிக் கொள்கிறார்கள். இதனை தொடர்ந்து தங்கமயில் அம்மா அப்பா, பாண்டியன் வீட்டிற்கு வந்து பாண்டியனிடம் ஹோட்டலில் 26,000 செலவு பண்ணியது எல்லாம் பெரிய விஷயமா? அது என்ன குன்னக்குடியில் இருக்கும் ஹோட்டலா? சென்னையில் இருக்கும் ஹோட்டலில் விலை அப்படித்தான் இருக்கும்.

பிள்ளைகள் சந்தோஷத்திற்காக இதெல்லாம் பெருசாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதை காரணமாக வைத்துவிட்டு நீங்கள் பேசாமல் இருப்பது சரி இல்லை என்று பாண்டியனிடம் சொல்கிறார். அத்துடன் தங்கமயிலின் அப்பா உங்களுக்கு காசு தான் பிரச்சனை என்றால் அந்த காசு நாங்கள் தந்து விடுகிறோம் என்று சொல்லி பாண்டியனின் கௌரவத்தை சீண்டும் விதமாக பேசி விடுகிறார். இதனால் கோபப்பட்ட பாண்டியன் இனி தங்கமயில் அப்பா அம்மா இப்படி ஒரு வார்த்தையை சொல்லக்கூடாது என்பதற்காக கரராக பேசி வெளியே அனுப்பப் போகிறார்.

- Advertisement -

Trending News