மனசெல்லாம் படத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக வித்யா பாலனை கமிட் பண்ணி இருந்தார்கள். அவர் ஒரு செட்யூல் படிக்கும்போதே, உனக்கு நடிப்பு வரலைன்னு’ ஷூட்டிங்கை நிறுத்தி, அவரை நீக்கிவிட்டு, த்ரிஷாவை ஹீரோயினாக்கி படத்தை முடித்தனர்.

அதன்பின்னர், பாலிவுட் சென்ற வித்யா இன்றைக்கு முன்னணி நடிகை. அவருக்கென்றே ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

இந்த நிலையில் தான் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கரின் 2.0 படத்துக்கு பிறகு, தன் அடுத்த படத்தை பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கப்போகிறார். இந்த படத்தில் தான் ரஜினிக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்க போகிறார்.

கபாலிக்கு ராதிகா ஆப்தேவை ரஜினி ஜோடியாக்கி இயக்கியது போல, தனுஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு வித்யா பாலனை கேட்டுள்ளார். அவரும் ஓகே சொல்ல, கால்சீட் மட்டும் பைனல் ஆகணுமாம்.

ரஜினியின் லிங்கா, கபாலி என்று வித்யா பாலனை ஜோடியாக்க கேட்டு, இப்போ தான் நேரம் கூடி வந்திருக்கு.