Tamil Cinema News | சினிமா செய்திகள்
இனிமேல் என் படத்தில் இந்த விஷயம் இருக்கக் கூடாது.. இயக்குனர்களுக்கு கட்டளையிட்ட ரஜினி
அரசியல் மற்றும் உடல்நிலை சர்ச்சைக்கு பிறகு தற்போது ரஜினிகாந்த் அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். அந்த வகையில் ஏற்கனவே நடித்து பாதியில் நிற்கும் அண்ணாத்த படத்தை விரைவில் முடித்துக் கொடுக்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து இளம் இயக்குனர்கள் பலரிடமும் ரஜினி கதை கேட்டு வருவதாக தெரிகிறது. அதில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி மற்றும் பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் முதல் வரிசையில் உள்ளார்களாம்.
அதுமட்டுமில்லாமல் ரஜினி இனி வருடத்திற்கு 2 படம் நடிக்க வேண்டும் என உறுதி எடுத்துள்ளார். அதற்குத் தகுந்த மாதிரி சுறுசுறுப்பாக வேலை செய்யும் இளைஞர் கூட்டத்தை தேடிச் செல்கிறார் ரஜினிகாந்த்.
அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் சமீபகாலமாக தன்னுடைய படங்களில் சில விஷயங்களை தூக்கியாக வேண்டும் எனவும், இல்லையென்றால் அது தன்னுடைய மார்க்கெட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தன்னுடைய வட்டாரங்களில் குறிப்பிட்டுள்ளார்.

rajinikanth-cinemapettai
மேலும் தனது கதைகூற வரும் இயக்குனர்களிடம் தன்னுடைய வயதுக்கு ஏற்ற கதைகளை உருவாக்குங்கள் எனவும், ஹீரோயின்களுடன் டூயட், பறந்து பறந்து போடும் சண்டைக் காட்சிகள் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ரஜினிக்கு கதை எழுதும் இயக்குனர்கள் அனைவருமே தற்போது அவரது வயதுக்கு ஏற்ப எழுத வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இனி வரும் ரஜினி படங்களில் கண்டிப்பாக ஹீரோயினை துரத்தி துரத்தி காதலிக்கும் காட்சிகள் இருக்காது. மேலும் வயதுக்கு ஏற்ற ரொமான்ஸ் இருக்கும் என்கிறார்கள்.
