சினிமா ரசிகர்கள் பேச ஆரம்பித்தாலே இப்போது பாகுபலி 2 படத்தை பற்றி தான் பேசுகிறார்கள். அதோடு ஒவ்வொரு நாளும் பாக்ஸ் ஆபிஸிலும் படம் கலக்கி வருகிறது. தற்போது இப்படம் வெற்றிகரமாக தன்னுடைய 4வது வாரத்தில் கலக்கி வருகிறது.

பாகுபலி 2 படம் ரஜினியின் கபாலி, விஜய்யின் தெறி படங்களின் சாதனை முறியடித்து சென்னையில் ஓடிக் கொண்டிருக்கிறது.

எப்படி என்றால் ரஜினியின் கபாலி 4வது வாரத்தில் மொத்தம் 35 ஷோக்களும், விஜய்யின் தெறி 40 ஷோக்களும் ஓடியிருக்கிறது. ஆனால் ராஜமௌலி பிரம்மாண்ட படமான பாகுபலி 2, 4வது வாரத்தில் மொத்தம் 125 ஷோக்கள் ஓடிக் கொண்டிருக்கிறது.