நான் அரசியலுக்கு வந்தால் ஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக்கொள்ளமாட்டேன் எனக்கூறி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் இவரின் அரசியல் பேச்சு குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின் – திமுக செயல் தலைவர்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள். அரசியலுக்கு வருவதும், வராததும் அவருடைய விருப்பம். ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன்.

திருமாவளவன் – விசிக தலைவர்

ரஜினி அரசியலுக்கு வந்தால் நண்பனாக வரவேற்பேன் .

அன்புமணி – பாமக இளைஞரணித் தலைவர்

சினிமா துறையினர் 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டது போதும் என்பதே மக்களின் மனநிலை. மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள் என மற்றவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்றே மக்கள் நினைக்கிறார்கள்.

தமிழிசை சவுந்தரராஜன் – தமிழக பாஜக தலைவர்

நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களிடம் ஊழலை எதிர்ப்பதாக குறிப்பிட்டது பாஜகவின் கருத்து.

அவரது பேச்சின்மூலம் அரசியலுக்கு வருவார் என்றே புரிந்து கொள்ள முடிகிறது. ரஜினி அரசியலுக்கு வரும்போது நல்ல கட்டமைப்போடும், நல்ல மனிதர்களுடன் வந்தால் அரசியலில் வெற்றி பெறுவார்.