உச்சகட்ட மன அழுத்தத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார்.. அடுத்த பஞ்சாயத்தை கூட்டிய மகள்கள்

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் போற்றும் உச்ச நடிகராக இருக்கும் ரஜினிகாந்துக்கு சமீபகாலமாக சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு இவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா தன் கணவர் நடிகர் தனுஷை பிரிய போவதாக அறிவித்து பலரையும் திடுக்கிடச் செய்தார்.

குழந்தைகளுக்காகவாவது அவர்கள் ஒன்றாக இணைய வேண்டும் என்று ரஜினிகாந்த் எடுத்த பல முயற்சிகளும் தோல்வியில் தான் முடிந்தது. தன் மகளின் வாழ்வையும், பேரன்களின் எதிர்காலத்தையும் நினைத்த அவர் மிகுந்த மன உளைச்சலில் சிக்கி தவித்து வருகிறார்.

இப்படி அப்பா ஒரு பக்கம் மன வேதனையில் இருக்கும் போது ஐஸ்வர்யா அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மகிழ்ச்சியாக தன் வேலைகளை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவருடைய இரண்டாவது மகள் சௌந்தர்யா தற்போது ஒரு பஞ்சாயத்தை கூட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதாவது விவாகரத்து அறிவிப்புக்குப் பின்னர் ஐஸ்வர்யா படம் இயக்குவது தொடர்பாக படுபிஸியாக இருக்கிறார். அதிலும் அவர் பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். அந்தப் படத்தில் தன் தங்கையின் கணவரை ஹீரோவாக நடிக்க வைக்க அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் இதில் சௌந்தர்யாவுக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லையாம். இதனால் அவருக்கும் அவருடைய கணவருக்கும் சிறு சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாத சௌந்தர்யா தற்போது இந்த விஷயத்தை தன் அப்பாவிடம் எடுத்துச் சென்றுள்ளார்.

இப்படி ஒரு பிரச்சனை முடிவதற்குள்ளாகவே அடுத்த பிரச்சனையை எடுத்து வரும் மகள்களை நினைத்து சூப்பர் ஸ்டார் அப்செட்டில் இருக்கிறாராம். ஏற்கனவே சூப்பர் ஸ்டாரின் இரண்டாவது மகள் முதல் திருமணம் சரிப்பட்டு வராமல் இப்பொழுது இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

தற்போது அதிலும் பிரச்சினை வந்து விடுமோ என்ற டென்ஷனில் சூப்பர் ஸ்டார் தன் இரண்டு மகள்களையும் கூப்பிட்டு செம டோஸ் விட்டுள்ளார். திரை உலகில் பேரும், புகழும் பெற்று உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் ரஜினிக்கு சொந்த வாழ்வில் இப்படி அடுக்கடுக்காக பிரச்சினைகள் வருவதை நினைத்து அவருடைய ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர்.

Next Story

- Advertisement -