ஜெயலலிதா தோற்க காரணமான சூப்பர் ஸ்டார்.. அந்த வார்த்தையால் ஆட்டம் கண்ட அதிமுக

தமிழக அரசியலில் ஒரு இரும்பு பெண்மணியாக வலம் வந்த ஜெயலலிதா பல சர்ச்சைகளுக்கும் ஆளாகியிருக்கிறார். 1996ம் ஆண்டு ஜெயலலிதாவின் ஆட்சியின் மீது தமிழ்நாட்டு மக்கள் மிகவும் அதிருப்தியில் இருந்தனர். அந்த சமயத்தில் ஜெயலலிதாவின் மீது பல புகார்கள் இருந்தது.

குறிப்பாக சொத்து குவிப்பு, ஊழல் என்பது போன்ற பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டது. அது மட்டுமல்லாமல் தன்னுடைய வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்தை யாரும் எதிர் பார்க்காத வண்ணம் மிகவும் ஆடம்பரமாக நடத்தியது அனைவரின் வெறுப்புக்கும் ஆளானது.

அதனால் ஜெயலலிதா மட்டுமின்றி அவருடைய தோழி சசிகலாவும் சேர்ந்து நிறைய அராஜகம் செய்கின்றனர் என்ற புகார்கள் எழுந்தது. குறிப்பாக இவர் வாகனத்தில் வரும் பொழுது போக்குவரத்தை அதிக நேரம் நிறுத்தி வைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்தார்.

மேலும் திரைத்துறையிலும் இவர் நிறைய எதிர்ப்புகளை சம்பாதித்து விட்டார். நடிகர், நடிகைகள் பலரையும் இவர் அவமதித்து இருக்கிறார். இதனால் அவர் மீது ஊழல், சொத்து குவிப்பு, போக்குவரத்து இடையூறு, திரையுலகினரை அவமானப்படுத்தியது போன்ற காரணங்களால் மக்கள் அவர் மீது அதீத வெறுப்பில் இருந்தனர்.

அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உச்சகட்ட கோபத்தில் இருந்தார். அதன் காரணமாக அவர் அப்போது நடந்த நடிகர் சங்க கூட்ட நிகழ்ச்சியில் இந்த ஆட்சி தொடர்ந்து நீடித்தால் தமிழ்நாட்டு மக்களை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று மேடையில் பேசினார்.

ரஜினிகாந்துக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர் வாக்கே வேதவாக்கு என்று எண்ணுமளவுக்கு ரசிகர்களுக்கு அவர் மீது தீராத பற்று இருந்தது. இதனால் ரஜினியின் பேச்சை கேட்ட மக்கள் அவர் திமுகவுக்கு ஆதரவு அளிக்கிறார் என்று நினைத்தனர்.

மேலும் அவரின் இந்த அதிரடியான பேச்சு காட்டுத்தீ போல பரவியது. இந்த சம்பவத்தினால் அதன் பிறகு நடந்த பொதுத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. அதற்கு எதிராக இருந்த திமுக மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்று முதல்வர் பதவியை கைப்பற்றியது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்