ரஜினிக்காக தனி பாதையை போட்டுக் கொடுத்த ஜெயலலிதா.. போயஸ் கார்டனை அதிரவைத்த சம்பவம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படங்களில் மட்டும் ஸ்டைலாக இயற்கையாகவே அவர் துணிச்சலாகவும் ஸ்டைலாகவும் நடந்துகொள்வார். அதற்கு உதாரணமாக பல மேடை பேச்சுகளில் தன் மனதில் இருப்பவற்றை நேரடியாகப் பேசும் சூப்பர் ஸ்டாரை எல்லோருக்கும் பிடிக்கும். அவரின் படங்களில் உள்ள வசனங்களும் அனைவருக்கும் பிடித்த ஒன்று முக்கியமாக என் வழி, தனி வழி போன்ற வசனங்கள் ரஜினிகாந்தின் உண்மையான குணங்களை வெளிப்படுத்தும்.

இந்த நிலையில் போயஸ் கார்டன் என்று சொன்னவுடன் நாம் அனைவருக்கும் தெரிந்த இரண்டு பெயர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வீடுகள்தான், அப்படி பிரபலமானதற்கான காரணம் ரஜினி வீடும் ஜெயலலிதாவின் வீடும் அருகருகில் இருப்பதே. ஒரு முறை ஜெயலலிதாவின் காவலர்கள் வாகனங்கள் டிராபிக்கில் நின்று கொண்டிருந்த நிலையில் தன்னுடைய வீட்டிற்கு செல்ல முடியாமல் ரஜினி தவித்தார்.

இதனால் ஷூட்டிங் முடித்து வீட்டிற்கு செல்லும் ரஜினிக்கு தாமதம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் ஜெயலலிதாவிடம் வேண்டுகோள் விடுத்த நிலையில் காவலர்களின் கார்கள் அடிக்கடி நின்று கொண்டுதான் இருக்கும். இந்த நிலையில் ஒருமுறை ரஜினி காரை விட்டு இறங்கி நடந்து சென்றார். ரஜினி நடப்பதை கண்ட அங்கிருந்த ரஜினியின் ரசிகர்கள் ஆயிரக்கணக்கான பேர் கூடிவிட்டனர். இதனால் அப்போது போயஸ் கார்டனே முழுவதும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதை கண்ட ஜெயலலிதா அதிர்ச்சி அடைந்து ரஜினி வருவதற்காக தனியாக ஒரு வழியை ஏற்படுத்தித் தந்தார். இதேபோல ஒரு முறை ரஜினிகாந்த் தன் வீட்டின் அருகில் உள்ள சோலார் 5 ஸ்டார் ஹோட்டலில் அடிக்கடி சென்று மது அருந்திவிட்டு தன்னுடைய போயஸ்கார்டன் வீட்டிற்கு நடந்து வருவார். ஜெயலலிதாவின் வீட்டை கடந்து நடந்து வரும் ரஜினி ஒரு முறை ஜெயலலிதாவின் வீட்டின் முன் இருந்த காவலர்கள் ரஜினியிடம் மது அருந்தி விட்டு செல்வதை குறித்து விசாரணை நடத்தி உள்ளனர். இதைப் பிடிக்காத ரஜினி ஜெயலலிதாவிடம் ஒரு கோரிக்கையை வைத்தார்.

நான் மது அருந்திவிட்டு அமைதியாக நடந்து என் வீட்டிற்கு செல்வது எனக்கு பிடிக்கும். ஆனால் உங்கள் வீட்டு காவலர்கள் நான் அமைதியாக நடந்து வரும் நிலையில் என்னை விசாரிப்பது எனக்கு மன கஷ்டங்களை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆகையால் என்னை உங்கள் காவலர்கள் விசாரிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் என ஜெயலலிதாவிடம் ரஜினி வேண்டுகோள் விடுத்தார். இதன் பின்னர் ஜெயலலிதா ரஜினியின் வேண்டுகோளை ஏற்று அவரை காவலர்கள் விசாரிக்கக் கூடாது என்ற உத்தரவை பிறப்பித்தார்.

தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் தலைவர்169 திரைப்படம் படமாக்கப்பட உள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கவுள்ளது இந்தத் திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்