rajinikanth-vijay

கடந்த 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் திரையுலகத்தின் வியாபாரம் தமிழகத்தில் மட்டுமே என்ற குறுகிய நிலையில் இருந்தது. ஆனால் தற்போது இதன் வியாபாரம் உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ளது. குறிப்பாக ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோர்களின் படங்கள் வெளிநாடுகளில் மிகப்பெரிய வசூலை பெற்று வருகின்றது

அதிகம் படித்தவை:  'வாவ்... ஒரே நாளில் 3 ரீல்களுக்கு டப்பிங் பேசி முடித்த சூப்பர் ஸ்டார்!' - ரசூல் பூக்குட்டி

இந்நிலையில் உலக அளவில் வெளிநாட்டு வியாபாரங்களில் முதல் ஐந்து இடங்களில் ரஜினி, விஜய் படங்கள் மட்டுமே உள்ளது. சமீபத்தில் ரிலீஸ் ஆன ‘கபாலி’யின் வெளிநாட்டு உரிமை ரூ.34 கோடிக்கும், லிங்கா ரூ.27 கோடிக்கும் எந்திரன் ரூ.23 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது. அதேபோல் இளையதளபதி விஜய்யின் ‘தெறி’ ரூ.18 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. மேலும் விஜய்யின் அடுத்த படமான விஜய் 60 படத்தை ரூ.16.75 கோடிக்கு அருண்பாண்டியன் பெற்றுள்ளார்.

அதிகம் படித்தவை:  'பத்ம விபூஷன்' விருதை தொடர்ந்து ரஜினிகாந்திற்கு மேலும் ஒரு உயரிய விருது?

மேற்கண்ட ஐந்து படங்களே வெளிநாட்டு உரிமைகள் அதிகம் விலைபோன படங்கள் ஆகும். எனவே ரஜினியும், விஜய்யும் தமிழ் திரையுலகை உலக அளவிலான வியாபாரத்திற்கு கொண்டு சென்ற சாதனையை செய்துள்ளதாக கோலிவுட்டினர் பெருமைப்பட்டு கொள்ளலாம்.