fbpx
Connect with us

Cinemapettai

மீண்டும் ஒரே மேடையில் சூப்பர்ஸ்டார் , இளையதளபதி – ரசிகர்கள் பெருமகிழ்ச்சி

மீண்டும் ஒரே மேடையில் சூப்பர்ஸ்டார் , இளையதளபதி – ரசிகர்கள் பெருமகிழ்ச்சி

கலைப்புலி எஸ்.தாணுவுக்கு இந்த ஆண்டு ரொம்ப்ப்ப்ப்பவே ஸ்பெஷல். ரஜினியின் மூன்றாவது படத்திலிருந்தே அவர் எதிர்பார்த்து காத்திருந்த ரஜினி படத் தயாரிப்பு என்ற அவரது கனவு இதோ நிறைவேறி படம் ரிலீஸ் வரை வந்துவிட்டது.

விஜய்யை வைத்து அட்லீ இயக்கத்தில் தயாரித்த தெறி படமும் வெற்றியடைந்துவிட்டது. கபாலி ரிலீஸ் தேதியான ஜுலை 22 ஆம் தேதிதான் தெறி படத்துக்கு 100 வது நாள். அந்த வகையில் ஜுலை 22 தாணுவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும்.

தாணுவின் படங்களின் வெற்றிவிழா எப்போதுமே களை கட்டும். இந்த முறை கபாலி ரிலீஸில் பிஸியாக இருப்பதால் தெறி விழாவை தள்ளிவைத்து கபாலியுடன் சேர்த்து இரண்டு படங்களின் வெற்றி விழாவாக கொண்டாடலாம் தாணு.

அநேகமாக ரஜினியையும் விஜய்யையும் ஒரே மேடையில் பார்க்கலாம். தாணுவின் மகன் இயக்கத்தில் உருவான இந்திரஜித் படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top