ரஜினி சூப்பர் ஸ்டார் ஆவதற்கு இதுதான் காரணம்.. இதே பழக்கம் விஜய், அஜித்திடம் உள்ளது

ரஜினிகாந்த் சினிமாவின் ஆரம்ப காலத்தில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பின்பு ஒரு பெரிய நடிகராக அவதாரம் எடுத்தார். இவர் வளரும் காலங்களில் இவரிடம் பணியாற்றிய பல நடிகர்களை தற்போது வரை தான் ஒரு பெரிய நடிகர் என்பது காட்டிக்கொள்ளாமல் சகஜமாக பழகி வருகிறார் என பல நடிகர்களும் கூறியுள்ளனர்.

அதாவது நாசர் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது நடிகர் ரஜினிகாந்த் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார் எனவும். சக நடிகர்கள் நடிக்கும் படங்களில் கூட எதார்த்தமாக வந்து நின்று சிறிய நடிகர்கள் நடிக்கும் நடிப்பையும் அவர்கள் நடிக்கும் விதத்தையும் பார்த்து ரஜினிகாந்த் கற்றுக் கொள்வார்.

அது மட்டுமில்லாமல் தன்னிடம் இல்லாத சில திறமைகளை மற்றவர்களிடம் இருப்பதை பார்த்து ரஜினிகாந்த் பிரமித்து போனதாகவும் அவரது நெருங்கிய நண்பர்கள் கூறியுள்ளனர். உதாரணத்திற்கு ரஜினிகாந்த் பல பேட்டிகளில் கமலஹாசன் நடிப்பை பார்த்து நான் வியந்து போய் உள்ளேன் என்னால் அவரை போல் நடிக்க முடியாது. சினிமாவிற்கு வருவதற்கு முன்பு அப்போது பார்த்த கமல்ஹாசனைப் போல தான் தற்போது வரை தான் அவரது நடிப்பை பார்த்து வியந்து போனதாக பலமுறை கூறியுள்ளார்.

இதேபோல்தான் நடிகர் விஜய்யும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்ததை விட தனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தில் தான் அதிகம் நடித்துள்ளார். விஜயும் தன்னுடன் நடிக்கும் சக நடிகரின் நடிப்பை பார்த்து பாராட்டியுள்ளார். மேலும் அவர்களிடம் இருக்கும் ஒரு சில திறமைகளை பார்த்து விஜய் கற்றுக்கொண்டதாக பலரும் கூறியுள்ளனர்.

அஜித் குமார் சினிமாவில் ஆரம்பத்தில் பெரிய அளவில் நடிப்பு வராததால் அப்போதிலிருந்தே தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களின் நடிப்பையும் பார்த்து கற்றுக் கொள்வார்.

அதுமட்டுமில்லாமல் மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதில் எந்த வித தயக்கம் காட்டியதில்லை எனவும் அதனால்தான் தற்போது வரை இவர்கள் மூவரும் சினிமாவில் தொடர்ந்து சாதித்து வர முடியதாகக் கூறி உள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்