புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

73 வயதில் இப்படி ஒரு எனர்ஜியா.! அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவர இருக்கும் 4 படங்கள்

Rajini: சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் வேட்டையன் படம் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற அந்த படத்தை தொடர்ந்து இப்போது கூலி பட சூட்டிங்கில் அவர் பிஸியாக இருக்கிறார்.

இடையில் உடல் நலக்குறைவு வந்த போதும் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் அவர் பணிக்கு திரும்பி இருக்கிறார். இதை அடுத்து அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

வரும் டிசம்பர் 12ஆம் தேதி வந்தால் சூப்பர் ஸ்டாருக்கு 74 வயதாகிறது. ஆனாலும் கூட அவர் இன்னும் அது சுறுசுறுப்புடனும் எனர்ஜியுடனும் இருப்பது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. அதனாலேயே அவர் அடுத்தடுத்து படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வரும் ரஜினி அடுத்து நெல்சன் உடன் இணைய உள்ளார். ஏற்கனவே இந்த கூட்டணி ஜெயிலர் மூலம் மாபெரும் வெற்றியை கொடுத்தது. அதையடுத்தது மீண்டும் இரண்டாம் பாகத்தில் இணைய உள்ளனர்.

நடிப்பில் பிஸியாக மாறிய ரஜினி

இதை அடுத்து மீண்டும் வேட்டையன் ஞானவேலுடன் இணையும் முடிவில் சூப்பர் ஸ்டார் இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்து கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்ற பேச்சும் பரவலாக இருக்கிறது.

இதற்கு அடுத்து மாரி செல்வராஜ் உடன் ரஜினி இணைய இருக்கிறார். ஏற்கனவே இது குறித்து மாமன்னன் படம் வெளியான போதே ஒரு தகவல் உலா வந்தது. அதன்படி விரைவில் சூப்பர் ஸ்டாரின் அடுத்தடுத்த படங்களின் அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியாக இளைஞர் போல் மாறி இருக்கும் தலைவரை பார்த்து ரசிகர்களும் உற்சாகத்துடன் இருக்கின்றனர். ஒரு பக்கம் கமல் தொடர்ந்து படங்களை கமிட் செய்து வரும் நிலையில் ரஜினியும் பிஸியாக மாறி இருப்பது அடுத்த தலைமுறை நடிகர்களை பதட்டப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

Trending News