India | இந்தியா
ரஜினிக்கே இந்த நிலைமைனா அப்புறம் நமக்கு.. தலைவருக்குன்னே எங்கேருந்து வரானுங்களோ
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொரோனா விழிப்புணர்வு வீடியோவில் தவறான தகவலை கொடுத்ததாக ட்விட்டரில் இருந்து அவர் பதிவிட்ட வீடியோவை நீக்கியுள்ளனர்.
சாதாரணமாக வாட்ஸ்அப்பில் இது போன்ற தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படும், ஆனால் பிரபலங்கள் இது போன்ற தவறான தகவல்களை வெளியிடுவது ட்விட்டர் நிறுவனம் கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில் இந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் விவாதங்கள் செய்யப்படுகின்றன. இது ஒருபுறமிருக்க அவர் கூறியதை தவறாக புரிந்து கொண்டதாக சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது 12 முதல் 14 மணி நேரம் மக்கள் வெளிவராமல் இருந்தால் ஸ்டேஜ் 3 போகாமல் தடுக்கலாம் என்று அவர் கூறியிருப்பதாக தெளிவுபடுத்தி உள்ளனர்.
ஆனால் சில தவறுதலான புரிதல் இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் பவன் கல்யாண் வெளியிட்ட வீடியோவும் ட்விட்டர் நிறுவனத்தால் நீக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளத்தில் இதை தவிர பல பிரபலங்கள் தங்களது ரசிகர்களுக்கு வைரஸின் அறிகுறிகள், தாக்குதலைப் பற்றி எப்படி காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதையும் அறிவுப்பூர்வமான வீடியோக்களை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழக அரசு தவறான செய்திகளை பரப்பும் நெட்டிசன்கள் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது. யாராவது இதுபோன்ற செய்திகளை பரப்பினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறைக்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
மக்கள் அனைவரும் ஒற்றுமையாக கொரோனவை எதிர்த்து மக்களின் பாதுகாப்பை கருதி வெளியே செல்லாமல் குடும்பத்துடன் நேரங்களை செலவிட்டு வருகின்றனர். அதன்பின் ரஜினி மீண்டும் ஒரு ட்வீட் போட்டார் அதாவது அவர் சொல்ல வந்ததை தவறாக புரிந்து கொண்டு செய்திகள் வெளிவந்துள்ளது என கூறி அதற்கு முற்று புள்ளி வைத்தார்.
ரஜினி ஒரு பேட்டி கொடுக்கும்போதுதான் ஒரு கருத்தை சொல்லிவிட்டு பின்பு அடுத்த நாள் அந்த கருத்துக்கு விளக்கம் கொடுப்பார். ஆனால் ட்வீட் போட்டாலும் விடாமல் சோதிக்கரானுன்களே..
