fbpx
Connect with us

Cinemapettai

சத்தியமா விடவே கூடாது.. இரட்டை கொலை செய்த காவலர்களை கிழித்த ரஜினி! ஆனால் 12 நாள் தாமதம் ஏன்?

Tamil Nadu | தமிழ் நாடு

சத்தியமா விடவே கூடாது.. இரட்டை கொலை செய்த காவலர்களை கிழித்த ரஜினி! ஆனால் 12 நாள் தாமதம் ஏன்?

சாத்தான்குளத்தில் காவல் கஸ்டடியில் இருந்த அப்பா மற்றும் மகனைக் கொன்ற காவல்துறையினருக்கு உடனடியாக தண்டனை கிடைக்க வேண்டும் என்று பல போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பல பிரபலங்கள், இந்திய அளவில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வரை வாய் திறக்கவில்லை என்று வருத்தத்தில் இருந்தனர் ரசிகர்கள். ஏனென்றால் இதுபோன்ற பிரபலங்கள் பதிவுகள் செய்தால் மட்டுமே, உலக அளவில்  அதிர்வலையை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பதிவை ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார். ஆனா என்ன, இதை கேட்பதுக்கு 12 நாட்கள் ஆகி விட்டதாகவும் எதிர்வினை கேள்விகள் வர தொடங்கிவிட்டது.

“தந்தையையும், மகனையும் சித்திரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட்டிடம் சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அனைவரும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தாக வேண்டும் விடக்கூடாது, சத்தியமா விடவே கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் உலக அளவில் உள்ள தமிழர்களுக்கு இந்த செய்தி போய் சென்றடையும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. இவ்வளவு சாதாரண குடிமக்களாக இருப்பவர்களுக்கு நியாயம் கிடைப்பது தாமதமானால், கண்டிப்பாக குற்றவாளிகள் தப்பித்து செல்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரிக்க சென்ற மாஜிஸ்திரேட்டை போலீஸ் ஒருவர் ‘ நீ ஒரு மயிரையும் புடுங்க முடியாது’ என்று ஒருமையில் திட்டியுள்ளார். இதனை வாக்குமூலமாக பதிவு செய்துள்ளார் அந்த நீதிபதி.

இவ்வளவு பிரச்சினைகள் வெளிவந்த பின்பும் காவல்துறையின் கொட்டம் அடங்கவே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்த அளவிற்கு அவர்கள் பேசுகிறார் என்றால் கண்டிப்பாக அரசியல் பின்புலம் இல்லாமல் பேசவில்லை என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

உடனடியாக தமிழக அரசு இதில் மீண்டும் தலையிட்டு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.

Continue Reading
To Top