இந்திய சினிமாவின் முந்தைய சாதனைகளை முறியடித்து 2 கோடி ஹிட்ஸ்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது “கபாலி” படத்தின் டீஸர்.

அது ஏற்படுத்திய எதிர்பார்ப்புடன், “கபாலி”  தரிசனத்திற்காக ரஜினி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்வகையில் ஜூலை 1 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகவிருக்கிறது – “கபாலி”

அதிகம் படித்தவை:  விஸ்வாசத்திற்கு போட்டியாக பேட்ட டீசர் டையத்தை வெளியிட்ட சன் நிறுவனம்.!

இந்நிலையில், “கபாலி” படத்தின் ஃபைனல் எடிட்டட் வெர்ஷன் தயராகிவிட்டதாம். கிட்டத்தட்ட 2 மணி 50 நிமிட நேரம் ஓடக்கூடிய அளவில் கபாலி படம் உள்ளதாம். இத்தனை நீளம் இருந்தால் ரசிகர்கள் சோர்வடைந்து யெளிய ஆரம்பித்துவிடுவார்கள் என்பதால், மக்கள் எந்த இடத்திலும் சோர்வடையக்கூடாது என்பதால்  20 நிமிடக்காட்சிகளை குறைக்கச் சொல்லி இயக்குனர் ரஞ்சித்திடம்  சொல்லி இருக்கிறார் ரஜினி.

அதிகம் படித்தவை:  ரஜினி,கமல் படங்களை தொடர்ந்து விஜய் படத்தை குறிவைக்கும் தயாரிப்பாளர்

கபாலி படத்தில் எந்தக்காட்சியை கட் பண்ணினாலும், அது படத்தின் கதைப்போக்கை பாதிக்கும் என்று சொன்னாராம் ரஞ்சித். ஆனாலும் தற்போது  நீளத்தைக் குறைக்கும் எண்ணத்தில் ட்ரிம் பண்ண தொடங்கி இருப்பதாக கேள்வி.